பக்கம் எண் :

கவந்தன் படலம் 735

எண்ணினான்; ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு - ஒன்று
அல்லது இரண்டு யோசனைத் தொலைவு உள்ளே கடந்து சென்று;
ஓங்கல்தான் நின்றென - ஒரு மலையே நின்றது போல; இருந்த
அக் கவந்தன் நேர் சென்றார் -
அமர்ந்திருந்த அந்தக் கவந்தனுக்கு
நேராகச் சென்றடைந்தனர் இருவரும்.

     ஒன்று இரண்டு யோசனை' என்பது உலக வழக்கில் பேசுவது
போல் அமைந்தது; திட்டவட்டமாக வரையறுத்துக் கூறாதபோது ஒன்று
அல்லது இரண்டு' என்ற பொருள்பட 'ஒன்றிரண்டு' எனப் பேசுவது
பொது வழக்கு. மலை நின்றால் அமர்ந்திருக்கும் கவந்தன் போலக்
காட்சியளிக்குமாம்; நிற்பதற்குக் கால் இல்லாத கவந்தன் இருந்த
கோலத்திலேயே நிமிர்ந்து நிற்கும் ஒங்கல் போன்றவன். அவன்
தோற்றத்தைச் சொல்லோவியப்படுத்தியது அருமை.                   10

3653.வெயில் சுடர் இரண்டினை
     மேரு மால் வரை
குயிற்றியதாம் எனக்
     கொதிக்கும் கண்ணினன்;
எயிற்று இடைக்கு இடை
     இரு காதம்; ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும்
     மகர வேலையான்.

    வெயில் சுடர் இரண்டினை - வெப்பம் மிக்க இரண்டு
சூரியனை; மேரு மால் வரை குயிற்றியதாம் என - மேருவாகிய
பெரிய மலையிலே பதித்தது என்று சொல்லும்படி; கொதிக்கும்
கண்ணினன் -
கொதிக்கின்ற கண்களை உடையவனும்; எயிற்று
இடைக்கு இடை இரு காதம் ஈண்டிய -
ஒரு பல்லுக்கும் அடுத்த
பல்லுக்கும் இடையில் இரண்டு காதம் தொலைவு கொண்டுள்ள;
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் - மீன் வாழும் கடல்
போன்ற வாயை வயிற்றிலே உடையவனும்.

     வெயில் : வெப்பத்தோடு கூடிய ஒளி. கவந்தன் மேருவைப்
போன்ற உருவம் கொண்டவன்; மேரு மலையிலே இரண்டு சூரியனைப்
பதித்தது போன்று காட்சியளிப்பவை அவன் கண்கள். வாய் எனும்
வேலை : உருவகம். வேலைக்கு மகரம் அடைமொழி. கண்ணினன்,
வேலையான் என இச் செய்யுளில் வரும் சொற்கள் தொடர்ந்து
மூக்கினான் நாவினான் என்பவற்றையும் இணைத்து 3661 ஆம்
பாடலில் உள்ள 'இருந்தவன்' என்ற சொல்லைக் கொண்டு முடியும்.
3653 முதல் 3661 வரையுள்ள செய்யுள்கள் ஒரு தொடர்.              11

3654. ஈண்டிய புலவரோடு
     அவுணர், இந்துவைத்
தீண்டிய நெடு வரைத்
     தெய்வ மத்தினைப்