ஆற்றலால் - பொறுமை என்னும் வலிமையால்; மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் - மேன்மேல்மிக்கு வரும் சினத்தை வேரொடு களைந்தார்கள். (ஆதலால்); ஆண்டுஉறை அரக்கரால்அலைப்புண்டார்- அக்காட்டில் தங்கியிருந்து இராக்கதர்களால் வருத்தமுற்றார். அரோ-அசை. இதனால் நிறை மொழி மாந்தராம் அம்முனிவர்கள் தம் தவ வலிமையால் அவ்வரக்கரைச்சினந்து சபித்து அழிக்காதிருத்தற்குக் காரணம் கூறப்பெற்றது. கூடா ஒழுக்கமாகியபொய்த்தவத்திலிருந்து நீக்குதற்கு 'மெய்த்தவம்' என்றார். தவத்தின் பயன் எய்த முதலில்சினத்தை நீக்கிப் பின் பொறுமையைப் பெற வேண்டும் என்பதாம். பொறை - காரணம் பற்றியோ, மடமை பற்றியோ ஒருவன் தமக்கு மிகை செய்த போது தாம் அதனை அவன் இடத்துச் செய்யாதுபொறுத்தல் ஆகும். தவத்தின் ஆற்றல் வேண்டிய வேண்டியாங்குஎய்தலாம். 8 இராமனை முனிவர்கள் வாழ்த்தித், தம் அல்லலைக் கூறல் 2639. | எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின் கொழுந்து என நின்ற அக் குரிசில் வீரனை; பொழிந்து எழு காதலின் பொருந்தினார், அவன் தொழும்தொறும் தொழும்தொறும், ஆசி சொல்லுவார். |
எழுந்தனர் எய்தினர் - (அம்முனிவர்கள்) புறப்பட்டு அணுகி; இருண்ட மேகத்தின் கொழுந்து என நின்ற அக்குரிசில்வீரனை- கரிய மேகத்தின் கொழுந்து போல அங்கு நின்ற வீரனாகிய அந்த இராமனை; பொழிந்து எழு காதலின் பொருந்தினார் - பொங்கி எழும் அன்போடு அடைந்தார்கள்;(அப்போது); அவன் தொழும் தொறும் தொழும் தொறும் ஆசி சொல்லுவார் - அந்த இராமன்தம்மைத் தனித்தனியே தொழுது வணங்கும் போதெல்லாம் வாழ்த்தினார்கள். இராமன் எழுந்தருளியதைக் கேட்டதும் காலம் தாழ்த்தாது முனிவர்கள் வந்தமை தோன்ற'எழுந்தனர் எய்தினர்' என்றார். செயல் விரைவு தோன்றப் பாடும் நிலையை இராமன் வில்லை'எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்' (699) என்பது போல இதுவும் குறிப்பால் உணர்த்தும்.திருஅவதாரப் படலத்தில் கோசலை இராமனைப் பெற்றெடுத்த போது 'கருமுகிற் கொழுந்து எழில்காட்டும் சோதியைத் திருவுறப் பயந்தனள்' (282) என்பார். கருமேகம் கைம்மாறு கருதாது அருள்செய்தற்கும் சான்றாம். இராமன் திருமாலின் அவதாரமாயினும் தானெடுத்த மானிடக்கோலத்திற்கேற்ப முனிவரை |