| வெதிர் பொரும் தோளினாளை நாடுதல் விழுமிது' என்றான். அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். |
'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை - சூரிய தேவனின் மகனும் பொன்போல ஒளிகொண்ட நிறம் உடையவனும் ஆகிய சுக்கிரீவனை; எதிர் எதிர் தழுவி - ஒருவருக்கொருவர் எதிர் கொண்டு தழுவி; நட்பின் இனிது அமர்ந்து - நட்பிலே இனிது பொருந்தி; அவனின் - அவன் உதவியால்; ஈண்ட - விரைவாக; வெதிர் பொரும் தோளினாளை - மூங்கிலை ஒத்த தோள் கொண்ட சீதையை; நாடுதல் விழுமிது - தேடுவது சிறந்தது; என்றான் - என்று கவந்தன் கூறினான்; அதிர்கழல் வீரர் தாமும் - ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த இராமலக்குவர்களாகிய வீரர்களும்; அன்னதே அமைவது ஆனார் - அவன் சொன்னதையே உடன்பட்டார்கள். சுக்கிரீவன் கதிரவன் மைந்தன்; பொன்னிற மேனி உடையவன். நிறத்தினான் என்ற சொல்லுக்கு உடல் உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதிர் கழல் - வினைத்தொகை. 55 3698. | ஆன பின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து அவனும் போனான் மானவக் குமரர்தாமும் அத் திசை வழிக் கொண்டு ஏகி கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து இறுக்கும் காலை, யானையின் இருக்கை அன்ன, மதங்கனது இருக்கை சேர்ந்தார். |
ஆனபின் - அதன்பின்; அவனும் - கவந்தன்; தொழுது வாழ்த்தி - இராம இலக்குவரைத் தொழுது வாழ்த்தி; அந்தரத்துப் போனான் - விண் வழியே போனான்; மானவக் குமரர்தாமும் - மனு மரபில் தோன்றியவர்களாகிய இராமலக்குவரும்; அத் திசை வழிக்கொண்டு ஏகி - கவந்தன் குறித்த இரலை மலை இருந்த திசை நோக்கிய வழியிலே சென்று; கானமும் மலையும் நீங்கி - காடும் மலையும் கடந்து; கங்குல் வந்து இறுக்கும் காலை - இரவு நேரம் வந்து சேர்ந்தபோது; யானையின் இருக்கை அன்ன - யானைகள் இருக்கும் இடம் போன்ற; மதங்கனது இருக்கை சேர்ந்தார் - மதங்க முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தார்கள். மனு மரபில் வந்தவர் மானவர்; வட மொழித் தத்திதாந்த நாமம். மானம் என்பது தமிழில் உயர்வைக் குறிக்கும்; உயர்வுடைய குமரர்என்ற |