பொருளில் மானவக்குமரர் என்றார் எனலுமாம். இருக்கை - இருக்கும் இடத்தைக் குறிக்கும் தொழிலாகுபெயர். மதங்க முனிவர் யானைகளிடத்துப் பரிவு கொண்டவராய் அவற்றைப் பேணியவர். ஆதலின், அவருடைய ஆச்சிரமச் சூழலில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன என்பர். எனவே, யானைகளின் இருப்பிடந்தானோ என்று எண்ணும் வகையில் அவர் தம் ஆச்சிரமம் அமைந்திருந்தது. 56 |