பக்கம் எண் :

சவரி பிறப்பு நீங்கு படலம் 775

துலங்குகிறது பம்பை. இயல்பாகவே தூயதாய் இலங்கும் பொய்கை
நீர்ப் பரப்பை ஏதோ ஒரு காரணத் தூண்டலால் இவ்வாறு இருந்தது
என்று கவிஞர் தம் குறிப்பைச் சேர்த்து வருணிப்பதால் இது
தற்குறிப்பேற்ற அணியாகும். வினைகள் என்னும் நெருப்பு என்ற
உருவகமும் இதில் இருப்பதால் உருவகத்தை உறுப்பாகக் கொண்ட
தற்குறிப்பேற்ற அணி என்பர்.

     தீவினை புரிந்தோர் ஆதலின் அத் தாழ்வு தோன்ற மக்களை
இச் செய்யுளில் மாக்கள் என்றார்.                              9