மிகைப் பாடல்கள் குறிப்புரை 1. விராதன் வதைப் படலம் 246 - 250 இந்த ஐந்து பாடல்களையும் பற்றி ஐயரவர்கள் நூலகப் பதிப்பில் காணப்படும் குறிப்பு : இதன்பின் ('குமரர் நீர் இவண்' எனத் தொடங்கும் பாடலுக்குப் பின்) ஒரு சுவடியில் ஐந்து அதிகப் பாடல்கள் உள்ளன. அவை, சந்தர்ப்பமும் பொருளும் பொருத்தமின்றி மாறுபட்டு இருத்தலால் அவற்றை இங்குக் குறிக்கவில்லை. வை.மு.கோ. பதிப்பில் இப்பாடல்களின் சுவடு கூட இல்லை. 246. | ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா, ஏதில் இன்னல் அனசூயையை இறைஞ்ச, 'இறையோய்! வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய். |
ஆதியான் - சிவன்; இடம் அமர்ந்தவள் - உமை 3-1 247. | 'உன்ன அங்கி தர, யோகிபெலை யோக சயனன்- தன்னது அன்ன சரிதத் தையல் சமைத்த வினை இன்று உன்னி, உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி. |
அங்கி - நெருப்பு; யோக சயனன் - திருமால் 3-2 |