பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 777

248.'பருதியைத் தரும் முன்
     அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி,
     கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி
     சுமந்து கொள்' எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து
     அரசி சாரும் எனலும்.

    பருதி - சூரியன்; அனுசன் - பின் பிறந்தோன் (தம்பி); சுருதி-
வேதம்.                                                    3-3

249.பாற்கடல் பணிய பாம்புஅணை
     பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண்
     எய்துதலின், என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென
     கரத்தின் அணையா,
ஊர்க்க முன், பணி உவந்து அருள்
     எனப் பெரிது அரோ.

    பரம் பரமன் - மேலுக்கு மேலானவன்              3-4

250. அன்றது அக் கடல் அளித்து
     அகல நின்று அளிதுஅரோ;
சென்று தக்க பணி சேர் முனி
     திறத்து எனின்அரோ;
வென்று இதற்கு மொழி மேல்
     இடுதல் வேண்டுதல்அரோ;
இன்று இதற்கும் ஓர் எல்லை
     பொருள் உள்ளுள் உளரோ.

    அளிது - இரங்கத்தக்கது.                          3-5

     சூழலுக்கு ஒவ்வாதன; சொல் தெளிவு இல்லாதன; பிழை வடிவு
கொண்டு குழ(ம்)ப்பும் சொல்லாட்சி கொண்டன. ஐயரவர்கள் நூலகப்
பதிப்பின் குறிப்பு மிகவும் பொருத்தம். அடையாளம் காட்டாமலே
விட்ட வை.மு.கோ. வின் செயல் மிகமிகப் பொருத்தம்.