251-253. இந்த நான்கு பாடல்களும் முன் வந்த ஐந்து மிகைப் பாடல்களின் தன்மை உடையனவே. 'சீர், தளை முதலியன பிறழ்ந்தும், பொருள் விளங்காமல் பதங்கள் சிதைந்தும் காணப்படுகின்றன' என்பது ஐயரவர்கள் நூலகப் பதிப்பின் விளக்கம். அப்பதிப்பு ஐந்து பாடல்கள்' என்கிறது; கம்பன் கழகம் நான்கையே அச்சிட்டுள்ளது. வை. மு. கோ. பதிப்பில் விடப்பட்டவை இவை 4-1, 2, 3, 4 251. | யோசனைப் புகுத யோகி முனி யோக வரையின் பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர் ஓசை உற்ற பொருள் உற்றன எனப் பெரிது உவந்து, ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண். 4-1 |
252. | ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும் சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார் மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே. 4-2 | 253. | விண்ணை ஆளிசெய்த மாயையினில் மெய் இல் மடவார் அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம் என்ன உன்னி, அதை எய்தினர் இறைஞ்சி, அவனின் அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ. |
254. | ஆடு அரம்பை நீடு அரங்கு- ஊடு நின்று பாடலால், ஊடு வந்து கூட, இக் கூடு வந்து கூடினேன். |
ஆடு அரம்பை - நடனமாடும் ரம்பை என்னும் பெயருடைய தேவசாதிப் பெண்; கூடு - உடம்பு. 62-1 |