பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 779

255. வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன்.

    நலிஞ்சு - நலிந்து, துன்புறுத்தி; நலிஞ்சு, பொலிஞ்ச - போலி
(நலிந்து, பொலிந்த); நாம வேல் - அச்சம் தரும் வேல்; கிலிஞ்சன்
என்பது ஓர் அரக்கனின் பெயர்.                               64-1

256.வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ.

    வெம்பு வில் - வெதும்புகின்ற வில்; அம்பரத்து நாதன் -
தேவருலகத் தலைவன்; இம்பர் - இவ்வுலகு.                     65-1

3. அகத்தியப் படலம்

257.'அருந் திறல் உலகு ஒரு
     மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து
     ஒருவன், பொன்றிலாப்
பெருந் தவம் செய்தவன்,
     பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல் -
     வரத! - யாம் எலாம்.

    தசமுகத்து ஒருவன் - பத்துத் தலை கொண்ட இராவணன்;
பொன்றிலா - அழியாத.                                   14-1

258.'தேவர்கள்தமைத் தினம்
     துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி,
     திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர்
     செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன்
     வலத்துக்கு யார் வலார்?

    துரந்து - விரட்டி.                                    14-2