பக்கம் எண் :

780ஆரணிய காண்டம்

259.'அவன் வலி படைத்து,
     மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை,
     தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை,
     மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் -
     இறைவ! - இன்னுமே.

    புங்கவர் - உயர்ந்தோர்.                               14-3

260.'ஆயிர கோடி என்று
     உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே
     மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று
     உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று
     அறிந்திலோம், ஐயா!

    மேவல் அல்லதை - வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங்
கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர
அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை).                        14-4

261."வெள்ளியங் கிரியிடை
     விமலன் மேலை நாள்,
கள்ளிய அரக்கரைக்
     கடிகிலேன்" எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு
     உதவினான்; கடற்
பள்ளி கொள்பவன் பொருது
     இளைத்த பான்மையான்.

    வெள்ளியங்கிரி - கயிலை மலை; விமலன் - இயல்பாகவே
மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் - திருமால்.14-5

262.'நான் முகன் அவர்க்கு
     நல் மொழிகள் பேசியே