பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 781

தான் உறு செய்
     வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ்சுடர் முதல்
    வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ்
     சிறைப்பட்டு மீண்டுளார்.'

    வினைத்தலை - வினைப் பயனிலே.                     14-6

263. என்று, பினும், மா தவன்
     எடுத்து இனிது உரைப்பான்:
'அன்று, அமரர் நாதனை
     அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச
     முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர்
     வலிமைக்கு நிகர் யாரே!

    தச முகப் பதகன் - இராவணனாகிய பாதகன்.              53-1

264.'ஆயவர்கள் தங்கள் குலம்
     வேர்அற மலைந்தே,
தூய தவ வாணரொடு
     தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின்
     கடனது' என்றான்;
நாயகனும், 'நன்று!' என
     அவற்கு நவில்கின்றான்:

    ஆயவர்கள் தங்கள் - அரக்கர்களாகிய அவர்கள்.          53-2

4. சடாயு காண் படலம்

265.'தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர்
     தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
     புணர்ந்தனன்; அத்தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து
     முக் கோடி விண்ணோர் ஈன்றாள்;