பக்கம் எண் :

782ஆரணிய காண்டம்

மைக் கருங் கண் திதி என்பாள் அதின்
     இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.

    ஐம்பதின்மர் - ஐம்பது பேர்; விண்ணோர் - தேவர்கள்;
இரட்டி - இரண்டு மடங்கு.                                24-1

266. தானவரே முதலோரைத் தனு பயந்தாள்;
     மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
     பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள
     பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,
     ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள்.

    தானவர் - அரக்கர்; வயிறு வாய்த்தாள் - கர்ப்பம் உற்றாள்.  24-2

267. மழை புரை பூங் குழல் விநதை, வான்,
     இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்
     பெரும் பறவைதம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல்,
     காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே
     செடி முதலாக் கண்ட எல்லாம்.

    மழை புரை பூங்குழல் - மேகம் போன்ற பொலிவு பெற்ற
கூந்தல்; கூகை - ஆந்தை; இழை புரையும் தாம்பிரை - (மகளிர்க்கு)
ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால்.            24-3

268.வெருட்டி எழும் கண பணப்பை வியாளம்
     எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம்
     எலாம் கதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி,
     உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம்
     ஆகிய பலவும், தெரிக்குங்காலை.