பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 783

     கண பணப் பை வியாளம் - கூட்டமாயுள்ள படமும்
நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட
பாம்புகளைக் குறித்தது); மருள் - அச்சம்; புயங்கம் - பாம்பு;
செலசரம் - நீரில் இயங்கும் உயிரினங்கள்.24-4

269.'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை,
     கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை,
     தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்;
     விநதை சுதன் அருணன் மென்தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப்
     புணர, உதித்தனம் யாம், புவனிமீதே.

    புது மதி சேர் நுதல் - (அமாவாசைக்குப் பின்) புதிதாகத்
தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி.                     24-5

270. என்று உரைத்த
     எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித்
    தொழுது, கண்
ஒன்றும் முத்தம்
     முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன
     நீர்மை நிகழ்த்தினார்.

    எருவை அரசன் - பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று
தாரவர் -
நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்;
முத்தம் - முத்துப் (போன்ற).                                 27-1

5. சூர்ப்பணகைப் படலம்

271. கண்டு தன்இரு வழி
     களிப்ப, கா....கத்து
எண் தரும் புளகிதம்
     எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக்
     குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, 'இவன்
     ஆர்?' என்று உன்னுவாள்.