எண்தரும் புளகிதம் - எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு); அண்டர் நாதன் - தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர் கிலாள் - குறிப்பாக உணராதவளாய். 11-1 272. | பொன்னொடு மணிக் கலை சிலம்பொடு புலம்ப, மின்னொடு மணிக்கலைகள் விம்மி இடை நோவ, துன்னு குழல் வன் - கவரி தோகை பணிமாற, அன்னம் என, அல்ல என, ஆம் என, நடந்தாள். |
பொன்னொடு மணிக் கலை - பொன்னும் மணியும் சேர்த்துச் செய்யப்பட்ட மணிமேகலாபரணம்; புலம்ப - ஒலிக்க. 33-1 6. கரன் வதைப் படலம் 273. | ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்; அறுத்தான் அறுத்தான் என் மூக்கை; கூற்றே கூற்றே என் உடலை, குலையும் குலையும்; அது கண்டீர்; காற்றே தீயே எனத் திரியும் கரனே! கரனுக்கு இளையோரே! தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே. |
ஆற்றேன் - தாங்க மாட்டேன்; வல்லபங்கள் - வெற்றிகள். 7-1 274. | பத்துடன் ஆறு எனப் பகுத்த ஆயிரம் வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில் முத் தலைக் குரிசிலுக்கு அன்று முக்கணான் அத்துணைப் படைத்து அவன் அருள உற்றுளார். |
வித்தக வரத்தர் - சதுரப்பாடு விளங்கும் வரம் பெற்றவர்கள்; முத்தலைக் குரிசில் - திரிசிரா என்னும் அரக்கர் தலைவன். 35-1 |