275. | ஆறு நூறாயிரம் கோடி ஆழித் தேர், கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம், ஏறிய பரி அவற்று இரட்டி, வெள்ளம் நூறு ஈறு இல் ஆள், கரன் படைத் தொகுதி என்பரால். |
ஆழித் தேர் - சக்கரம் கொண்ட தேர்கள்; குஞ்சரம் -யானை. 38-1 276. | நடந்து தன் இரு கரத்தினின் நலம் பெறும் சிலைவாய் தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்; தொகைப்படும் அண்டம் இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது; அங்கு இறைவனும் இமைப்பில் மிடைந்த வெஞ்சரம் மழை விடு தாரையின் விதைத்தான். |
சிலைவாய் - வில்லிலிருந்து. 148-1 277. | விழுந்த வெம் படை தூடணன் சிரம் என வெருவுற்று அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர்; எழுந்த காதலின் இடைவிடாது, இமையவர், முனிவர், பொழிந்து பூ மழை போற்றினர்; இறைவனைப் புகழ்ந்தார். |
அழிந்த சிந்தையர் - தளர்ந்த மனத்தவராய்; காதல் - அன்பு. 161-1 7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 278. | பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன்கொடுத்த வரத்தின் பான்மை |
|