| உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம் ஈதுஎனக் குறித்து அங்குஇமையோர் தச்சன் அருக்கர் வெயில்பறித்து அமைத்தஅரிமுகத்தின் மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ. |
பரிக்கும் - ஈர்க்கும் (அண்டத்தின் கோளங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பன); குலிசத்தவன் - வச்சிராயுதம் ஏந்தும் இந்திரன்; அரித் தவிசு - சிங்க ஆசனம்; நாயகம் - தலைமை; இமையோர் தச்சன் - மயன்; அருக்கர் - சூரியர்கள்; அரிமுகத்தின் மணிப் பீடம் - சிங்க முகம் அமைத்து மணிகள் பதித்த (அழகிய) பீடம். 2-1 279. | பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப் பொழி கதிரின் ஒளி குலாவி, பரப்பும் இருட் குறும்பு எறிந்த பகல் ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க, திருப் பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ மன்னோ. |
பொருப்பு - மலை; துரந்து - விரட்டி; உரு - நிறம், அழகு; உத்தரிகம் - மேலாடை; வாகு - தோள். 5-1 280. | இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ் இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன, அலங்கு செம் பொன் இழைப் பயிலும் அருந்துகிலின் பொலிந்தஅரைத் தலத்தின்மீது, நலம் கொள் சுடர்த் தொகை பரப்பும் நவமணிப்பத்தியின் இழைத்தநலம் ஆர்கச்சு துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ. | வெயில் - ஒளி; வடி - கூர்மை. 5-2 281. | வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி, மருவும் எண் திசைப் படு நிருபர் |
|