பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 787

ஆனவர்தமது புகழ் எலாம் ஒருங்கே
     அன்ன மென் புள் உருத் தாங்கி,
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன்
     பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்
பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி
     பாங்கினில் பயின்றிட மன்னோ.

    அளிக்கும் - காக்கின்ற; புரந்தரன் - இந்திரன்; கவரி மயிர்க்
குலம் -
வெண்சாமரைக் கூட்டம்; பாங்கினில் - பக்கங்களில்.       5-3

282.தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத்
     தெரிவையர், சித்தர் மங்கையர்கள்,
மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள்,
     விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள்,
     ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி,
     பலாண்டு இசை பரவிட மன்னோ.

    கணிப்பில் - கணக்கற்ற; பலாண்டு - பல்லாண்டு.            5-4

283. தண் கதிர் பொழியும்
     ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு
     நிலத்து இருந்து, வேறு வேறு
எண் கடந்து உரு
     எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடைத் தொகை
     பல கோடி மேவவே.

    தவள மா மதி - வெள்ளையாயுள்ள பெருமைக்குரிய சந்திரன்.  7-1

284. ஏவலின் புரி தொழில்
     எவையும் செய்து, செய்து 
ஓவு இலர், துயர்க் கடற்கு
     ஒழிவு காண்கிலர்,