| மேவரும் பெரும் பயம் பிடித்து, விண்ணவர் தாவினர், தலைத் தலை தாழ்ந்து நிற்கவே. |
ஓவு இலர் - நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்); ஒழிவு - முடிவு. 7-2 285. | வியக்கும் முப் புவனமும் வெகுண்டு, மேலைநாள் கயக்கிய கடுந் திறல் கருத்துளே கிடந்து, உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று இயக்கரும் திசை திசை இறைஞ்சி நிற்கவே. |
கயக்கிய - கசக்கிய. 11-1 286. | பெருந் திசை இரிந்திடப் பெயர்த்தும் வென்ற நாள், பருந் திறல் புயம் பிணிப்புண்டு, பாசத்தால் அருந் தளைப்படும் துயர் அதனுக்கு அஞ்சியே, புரந்தரன் களாஞ்சி கை எடுத்துப் போற்றவே. |
களாஞ்சி - காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம். 11-2 287. | கடி நகர் அழித்துத் தன் காவல் மாற்றிய கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே, வடதிசைப் பரப்பினுக்கு இறைவன் மா நெதி இடு திறை அளந்தனன், இரந்து நிற்கவே. |
|