பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 789

     கடிநகர் - காவல் மிக்க நகரம்; மாற்றிய- நீக்கிய; நெதி-நிதி. 15-1

288. நிகர் அறு புவனம் மூன்று
     என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடும்
     அண்டச் சூழலில்
வகையினைக் குரு முறை
     மரபின் வஞ்சியாப்
புகரவன் விரித்து எடுத்து
     இயம்பிப் போகவே.

    குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் - குரு நெறி
மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு.              15-2

289. மதியினில் கருதும் முன்
     வந்து வேண்டின
எது விதப் பொருள்களும்
     இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம்
     அஞ்சுஅவையும் தெற்றென,
விதிமுறை பெறத்
     தனி விளம்பிப்போகவே.

    திதி முதல் அங்கம் அஞ்சு - திதி முதலான ஐந்து
அங்கங்கள், பஞ்சாங்கம்.                                     15-3

290.'உரிய நும் குலத்து உளேன்
     ஒருவன் யான்' எனப்
பரிவுறும் பழமைகள்
     எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய்
     அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை
     காத்து நிற்கவே.

    நிருதி - தென்மேற்குத் திசைக் காவலன்.                   17-1