பக்கம் எண் :

அகத்தியப் படலம் 79

 வில் இயல் மொய்ம்பினாய்!
     வீடு காண்டுமோ?

    வில்லியல் மொய்ம்பினாய் - வில்வித்தையில் வலிமையுடையவனே!:
வல்லியம் பலதிரி வனத்து மான் என - பல புலிகள்சஞ்சரிக்கும்
காட்டிலுள்ள மான்களைப் போல; எல்லியும் பகலும் நொந்து இரங்கி
ஆற்றலெம் -
இரவும் பகலும் மனம் நொந்து வருந்தி (அவ்வரக்கர் செய்யும்
கொடுமைகளைப்) பொறுக்கமாட்டாதவர் ஆகி; சொல்லிய அறநெறித்
துறையும் நீங்கினெம் -
நூல் கூறிய தருமவழிகளிலிருந்து விலகினவர்
ஆனோம்; வீடு காண்டுமோ? - இத்துன்பங்களிலிருந்து விடுதலை
அடைவோமா?

     விற்கருவி கூறினமையால் 'அரக்கர்களை அழித்து எங்களைக் காப்பாய்'
என்ற குறிப்புபுலப்படும். துன்ப மிகுதியைச் சுட்ட 'வீடு காண்டுமோ' என்றார்.
அறநெறியிலிருந்து வழுவியமையால்உயர்நிலை எவ்வாறு அடைவோம் என்று
கூறினார் என்பர். புலி அரக்கர்களுக்கும் மான்முனிவர்களுக்கும் உவமை. 13

2644.'மா தவத்து ஒழுகலெம்;
     மறைகள் யாவையும்
ஓதலெம்; ஓதுவார்க்கு
     உதவல் ஆற்றலெம்;
மூதெரி வளர்க்கிலெம்;
     முறையின் நீங்கினேம்;
ஆதலின், அந்தண
     ரேயும் ஆகிலேம்!'

    மாதவத்து ஒழுக லெம் - பெருமை பொருந்திய தவநெறியில்
நடக்கின்றோம் அல்லோம்; மறைகள் யாவையும் ஓதலெம் -வேதங்கள்
எல்லாவற்றையும் ஓதுகின்றோமில்லை; ஓதுவார்க்கு உதவல் ஆற்ற லெம் -
வேதம் ஓதும் மாணவர்களுக்கு உதவும் கடமையைச் செய்கின்றோம்
அல்லோம்; மூதெரிவளர்க்கிலெம் - பழமையான வேள்வித் தீயை
வளர்க்கின்றோம் இல்லை; முறையின்நீங்கினேம் - எங்களுக்குரிய
ஒழுக்கங்களிலிருந்து விலகினோம்; ஆதலின் அந்தணரேயும்ஆகிலேம் -
ஆகையால் அந்தணர் என்பது கூட ஆகின்றோமில்லை.

     அந்தணர்க்குரியவையாம் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல்என்பவற்றுள் ஓதல் ஓதுவித்தலையும் வேட்டலையும்
கூறியுள்ளார். பிறவற்றை அருத்தாபத்தியால்பெறவைத்தார். மூதெரி என்பது
பிரமசரியம் தொடங்கி வளர்த்து வருவதான வேள்வித்தீ யாகும்.மறைகள்
யாவையும் என்பதால் வேதம், வேத அங்கங்கள், சாத்திரங்கள்
முதலியவற்றையும்கொள்வர். இத்தகைய தீய வினைகளிலிருந்து நீக்க நீயே
கதி என்றார்என்க.                                             14