291. | என்ற பொழுதில், கடிது எழுந்து அலறி, வாய் விட்டு, அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச, புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப, கன்றிய மனத்தள் கழறுற்றிடுவதானாள். |
கடிது எழுந்து - விரைவாக எழுந்து. 49-1 292. | என்பதை மனக்கொடு இடர் ஏறிய கருத்தாள், முன்ப! உன் முகத்தின் எதிர் பொய் மொழியகில்லேன்; நின் பதம்; நின் ஆணை இது; நீ கருதுவாய் என்று அன்பின் உரியோர் நிலை எடுத்து அறைசெய்கிற்பாள். |
மனக்கொடு - மனத்தில் கொண்டு (எண்ணி); முன்ப - வலிமை உடையவனே. 51-1 293. | 'ஈது அவர்கள்தங்கள் செயல்' என்று அவள் உரைப்ப, கோது உறு மனத்து எரி பிறந்து, குறை நாளில் மோது வடவைக் கனல் முகந்து, உலகம் எல்லாம் காதுறு சினததன் இதனைக் கழறுகின்றான். |
காதுறு சினத்தன் - சிதைக்கும் சினம் உடையவனாய். 57-1 294. | இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்பக் கேட்ட கொற்ற வாள் அரக்கன் முன்னே, கொண்ட வெங் கோபத் தீயில் |
|