| சொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் அற்றதால; பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே. |
கொற்றவாள் அரக்கன் - வெற்றி தரும் வாள் ஏந்திய அரக்கன் (இராவணன்); ஆதரம் - அன்பு, பற்று. 81-1 8. மாரீசன் வதைப் படலம் 295. | ஆயிரம் அடல் கையுடையானை மழு வாளால் 'ஏ' எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லோன் மேய விறல் முற்றும் வரி வெஞ் சிலையினோடும் தாயவன் வலித் தகைமை யாம் உறு தகைத்தோ. |
ஆயிரம் அடல் கையுடையான் - ஆயிரம் வெற்றிக் கைகளை உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் - ஈடு இல்லாதவன் (வாலி); தாயவன் - கடந்தவன் (இராமன்). 25-1 9. இராவணன் சூழ்ச்சிப் படலம் 296. | ஓவரு கவனம்மீது உற்றுச் சென்றுளான், பூ வரு சாலையுள் பொருந்த நோக்குறா, 'யாவர், இவ் இருக்கையுள் இருந்த நீர்?' என்றான் - தேவரும் இடர் உறத் திரிந்த மேனியான். |
ஓவரு - நீக்குதற்கு அரிய; பூவரு சாலை - மலர்கள் மலரும் (இலைக்) குடில்; நோக்குறா - பார்த்து. 24-1 297. | 'மேனகை, திலோத்தமை, முதல ஏழையர், வானகம் துறந்து வந்து, அவன் தன் மாட்சியால், |
|