| ஊனம் இல் அடைப்பை, கால் வருடல், ஒண் செருப்பு, ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே. |
ஏழையர் - பெண்கள்; அடைப்பை - வெற்றிலைப் பை (தாங்குதல்). 43-1 298. | 'சந்திரன், இரவி என்பவர்கள்தாம், அவன் சிந்தனை வழி நிலை திரிவர்; தேசுடை இந்திரன் முதலிய அமரர், ஈண்டு, அவன் கந்து அடு கோயிலின் காவலாளரே. |
தேசு - ஒளி; கந்து அடு கோயில் - கட்டுத்தறிகளை முறிக்கும் (களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை. 43-2 299. | என்றனள்; அபயம், புட்காள்! விலங்குகாள்! இராமன் தேவி, வென்றி கொள் சனகன் பேதை, விதியினால் அரக்கன் தேர்மேல் தென் திசை சிறைபோகின்றேன்; சீதை என் பெயரும் என்றாள்; சென்று அது சடாயு வேந்தன் செவியிடை உற்றது அன்றே. |
புட்காள் - பறவைகளே; பேதை - பெண். 43-2 10. சடாயு உயிர் நீத்த படலம் 300. | 'பின்னவன் உரையினை மறுத்து, பேதையேன், அன்னவன்தனைக் கடிது அகற்றினேன்; பொரு மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி இன்னமும் எவ் வினை இயற்றுமோ?' எனா, |
|