பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 793

     பின்னவன் - தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் -
(இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு).           45-1

301. சடாயுவைத் தடிந்த வாளைச்
     சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
'தடால்' எனக் கபாடம் சாத்தி,
     சாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து
     எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும்
     கோமுகன்-குறளி ஒத்தான்.

    கபாடம் - வாயில் (கதவு).                             58-1

302.'பெண்ணை விட்டு அமைந்திடின்
     பிழையது ஆம்' என,
உள் நிறை கூடமும்
     உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு
     அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி
     வேண்டி எய்தினாள்.

 

303.முன்னமே பூமியை
     முகந்து, பாதலம்-
தன்னிலே தரித்தன
     சயமும் தந்திலது
என்னவே, மாகம்மீது
     ஏகினான் செய
உன்னியே இராவணன்
     உவந்ததொத்துஅரோ. 

    மாகம் - வானம்.                                    58-3

304. சடாயுவும் சாய்ந்தனன்;
     சனகி சாய்ந்தனள்;
விடா செயம் ஏதியும் பிற
     கதி வேறு உளோள்