பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 795

11. அயோமுகிப் படலம்

308.என்று அவள் கூறலும்,
     மைந்தனும், 'இன்னே
நன்றியதாய நறும்
     புனல் நாடி,
வெனறி கொள் வீரன்
     விடாய்அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன்'
     என்று உரைசெய்தான்.

    நன்றியதாய - நல்லதான; வென்றி கொள்வீரன் - வெற்றி
கொள்ளும் வீரன் (இராமன்); விடாய் - தாகம்.                  55-1

12. கவந்தன் படலம்

309.'பாரிடமே இது;
     பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப்
     பரந்த மெய்யது;
பார், இடம் வலம்
     வரப் பரந்த கையது:-
பார் இடந்து எடுத்த
     மா அனைய பாழியாய்!

    பாரிடம் - பெரிய இடம்; பரவை சுற்றும் பார் - கடல் சூழ்ந்த
உலகம்; பாழி - வலிமை.                                    21-1

310.காவாய் என்பால், தன்
     ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, 'இவ்
     வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா, என்ன, அன்னது
     கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ,
     என் புகல் அம்மா!

    இவ்வெய்யோற்கு - இந்தக் கொடியவனுக்கு.       29-1