பக்கம் எண் :

796ஆரணிய காண்டம்

13. சவரி பிறப்பு நீங்கு படலம்

311.'மாங்கனி, தாழையின் காய்,
     வாழையின் கனிகளோடும்,
ஆம் கனி ஆவதே என்று அருந்தி,
     நான் விரும்பி வைத்தே
பாங்கின் நல் அமுது செய்மின்'
     என்று அவள் பரவி, நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு,
     திருஉளம் மகிழ்ந்தான், வீரன்.

    அமுது செய்மின் - சாப்பிடுங்கள்.                    5-1