நாட்களை உடையவர்களாயிருக்கிறோம்; இரவி தோன்றினாய் - கதிரவன் போல நீ வந்துஎழுந்தருளினாய்; நின் அபயம் யாம் என்றார் - உனக்கு அடைக்கலம் யாம் என்றுஅம்முனிவர் கூறினர்; அரசன் ஆணையைச் சக்கரம் என்பது கவிமரபு. உலகை ஓம்பிய மன்னவன் புதல்வ என்றதால்தந்தைக்கு உரிய பொறுப்பு மகனுக்கும் உண்டு என்பதை உணர்த்தும். பொருள் என்பதற்கு உறுதிப்பொருள், செயல், புகழ், மெய்மை எனப் பலபொருள் காண்பர். துன்பத்தை இருளாகக் கூறல் பண்டையமரபு. போக்கிலா இருள் விடியாத இருளாம். அரக்கரை இருளாகவும் இராமனை இருள் நீக்கும்கதிரவனாகவும் கூறுவர். அருளுடை வீர என்பதால் தீயோரை அழிப்பதற்கு வீரமும் தன்னைவிரும்பியவரைப் பாதுகாப்பதற்கு அருளும் உடன் கூறப்பெற்றன. அபயம் - பயமற்ற நிலை. தண்டகாரணிய முனிவர்கள் இராமனிடம் அடைக்கலம் புகுந்த நிலை இதனால் நன்குவிளங்கும். 16 இராமன் அபயம் அளித்தல் 2647. | 'புகல் புகுந்திலரேல், புறத்து அண்டத்தின் அகல்வரேனும், என் அம்பொடு வீழ்வரால்; தகவு இல் துன்பம் தவிருதிர் நீர்' எனா, பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான். |
பகலவன் குலமைந்தன் - சூரியன் குலத்துத் தோன்றிய இராமன் (முனிவர்களை நோக்கி); புகல் புகுந்திலரேல் - அவ்வரக்கர்கள் (இனித் துன்பம் செய்வதில்லை என்று கூறி) அடைக்கலம் அடையாமல் போவாரானால்; புறத்து அண்டத்தின் அகல் வரேனும் - (இவ்வுலகை விட்டு) அப்புறத்துள்ளவேறு அண்டங்களுக்கு ஓடிப் போவாரானாலும்; என் அம்பொடு வீழ்வரால் - நான் எய்த என்பாணத்தொடு கீழே வீழ்ந்து மாய்வர் ஆதலால்; தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் - தகுதியில்லாத இத்துன்பத்தை நீக்குங்கள் நீங்கள்; எனா - என்று சொல்லி; பணிக்கின்றான் - (மேலும்) சொல்கின்றான். பகலவன் - பகலைச் செய்கிறவனாகிய சூரியன், என் அம்பொடு வீழ்வர் எனும் போது இராமன்தன் அம்பு அண்டங்களுக்கு அப்புறத்த அண்டங்களுக்குச் சென்றாலும் அங்கும் சென்று அரக்கரைக்கொல்லும் எனத் தன் ஆற்றலை எடுத்துரைத்தலும் ஆம். அம்பின் வீழ்ச்சி அரக்கர் வீழ்ச்சிக்கும் காரணமாகும். இது செயலின் விரைவைக் காட்டும் அம்பொடு என்பதிலமைந்த உருபுகருவிப் பொருளில் வந்தது. முனிவர்கள் வருத்தம் உறுதல் என்பது தக்கது அன்று என்ற கருத்துபுலப்படத் தகவில் துன்பம் என்றான். பணித்தல் - உறுதிகூறல். 17 |