பக்கம் எண் :

86ஆரணிய காண்டம்

    தோன்றல் - தலைவனே!; நீ முனியின் - நீ கோபம் கொண்டால்;
மூன்றுபோல்வன - இந்த மூன்று லோகங்களைப் போல்வனவாகிய;
முப்பது கோடி புவனத் தொகை வந்து- முப்பது கோடி உலகங்களுடைய
கூட்டங்கள் (ஒரே காலத்தில் ஒருங்கே சேர்ந்து) வந்து; ஏன்ற போதும் -
எதிர்த்தாலும்; எதிர் அல என்றலின் - (உனக்கு) ஈடல்ல என்ற
தன்மையில்; எம் தவப் பெரு ஞானமே சான்றலோ - எங்களுடைய மிகப்
பெரிய தத்துவ ஞானமேசாட்சி அல்லவோ? (ஆம்).

     முப்பது கோடி என்றது ஒன்றுக்குக் கோடியாகப் பெருகி வருதல்.
எல்லையற்ற பெருக்கத்தைக்கோடி என்பது இலக்கிய வழக்கு. நீ போர்
செய்யுமுன் பகைவர் மீது கொள்ளும் சீற்றமே அவர்கள்வேரோடு அழிய
வகை செய்யும். கடவுளின் பேராற்றலைத் தவம் செய்து பெற்ற ஞானத்தாலே
அறியஇயலும் என்பார். தவப்பெரு ஞானம் - ஐயம் திரிபில்லாத
மிகப்பெருமைவாய்ந்த தத்துவ ஞானம்.புவனம் மூன்று - சுவர்க்கம்.
மண்ணுலகம், பாதாளம். தோன்றல் - அண்மை விளி.                24

2655.'அன்னது ஆகலின், ஏயின
     ஆண்டு எலாம்,
இன்னல் காத்து இங்கு இனிது
     உறைவாய்' எனச்
சொன்ன மா தவர் பாதம்
     தொழுது, உயர்
மன்னர் மன்னவன்
     மைந்தனும் வைகினான்.

    அன்னது ஆகலின் - (நின் பெருமை) அத்தகைய தாயிருத்தலால்;
ஏயின ஆண்டு எலாம் - (நீ காட்டில்இருக்குமாறு) அமைந்த ஆண்டுகள்
எல்லாம்; இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் - எங்களுக்குத்
துன்பம் வராமல் காத்து இந்தத் தவ வனத்தில் இனிது மகிழ்ந்து வாழ்வாயாக;
எனச் சொன்ன மாதவர் பாதம் தொழுது - என்று கூறிய பெருந்தவ
முனிவர்களின் அடிகளை வணங்கி;உயர் மன்னர் மன்னவன் மைந்தனும்
வைகினான் -
சிறந்த அரசர்க்கரசனாகிய தயரதசக்கரவர்த்தியின் மகனாம்
இராமனும் தங்கியிருந்தான்.

     ஏயின - சிற்றன்னை கைகேயி ஏவினை என்றுமாம். இன்னல் காத்து
என்பது துன்பம் வராமல்தடுத்தல். உயர் என்ற அடையை மன்னர்க்கும்,
மன்னவனுக்கும் மைந்தனுக்கும் கூட்டிப் பொருள்காணலாம். மைந்தனும்
என்று கூறியதால் சீதையும் இலக்குவனும் வைகினர் என்பது தானே
பெறப்பட்டது.                                                25

இராமன் பத்தாண்டுகள் தண்டக வனத்தில் தங்கியிருத்தல்

2656.ஐந்தும் ஐந்தும் அமைதியின்
     ஆண்டு, அவண்,