பக்கம் எண் :

அகத்தியப் படலம் 89

 எய்த யான் செய்தது
     எத் தவம்?' என்றனன்;
ஐயனும், அவற்கு
     அன்பினன் கூறுவான்.

    வைகும் வைகலின் - (அவ்வாறு) தங்கியிருக்கும் பொழுது;
மாதவன் -
பெருந்தவம் செய்த சுதீக்கணன்; மைந்தன் பால் -
இராமனிடத்தில்; செய்கை யாவையும் செய்து - செய்ய வேண்டிய
உபசாரங்கள் எல்லாவற்றையும் செய்து; 'செல்வ! இவண் நீ எய்த யான்
செய்தது எத்தவம்?'என்றனன் -
செல்வமுடையவனே! இங்கு நீ
எழுந்தருளும் படி நான் செய்தது எத்தகையதவமோ என்று சொன்னான்;
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் - இராமனும் அம்முனிவனுக்கு
அன்புடையவனாய்ச் சொல்லுவான்.

     வைகல் - வேளை என்றுமாம் செல்வன் - அரசச் செல்வமுடையவன்;
இம்மை மறுமை மோட்சச்செல்வங்களை அருள்பவன் என்றுமாம். தம்மிடம்
வந்தவரிடம் இன்மொழி பேசி மகிழ்வுறச்செய்தல் தலையாய செய்கையாம். 29

2660. 'சொன்ன நான்முகன்தன்
     வழித் தோன்றினர்
முன்னையோருள், உயர்
     தவம் முற்றினார்
உன்னின் யார் உளர்?
     உன் அருள் எய்திய
என்னின் யார் உளர்,
     இற் பிறந்தார்?' என்றான்.

    சொன்ன நான்முகன் தன்வழித் தோன்றினர் முன்னையோருள் -
சிறப்பாகக் கூறப் பெற்ற பிரமனின் வமிசத்தில் பிறந்தவர்களாகிய முதன்மை
பெற்ற பண்டையமுனிவர்களுள்; உயர்தவம் முற்றினார் உன்னின் யார்
உளர் -
சிறந்த தவத்தை முற்றச்செய்தவர் உன்னைப் போல வேறு எவர்
இருக்கின்றனர்?; உன் அருள் எய்திய இற்பிறந்தார்என்னின் யார் உளர்
என்றான் -
உன் அருளை அடைந்த இல்வாழ்க்கையில் தோன்றினோர்
என்னைப் போலப் பேறு பெற்றவர் வேறு எவர் உள்ளார் எனக் (இராமன்)
கூறினான்.

     சொன்ன - ஆன்றோர் யாவரும் புகழ்ந்து கூறிய என்றுமாம்.
நான்முகன் வழியில்தோன்றியவர் அந்தணர் ஆவர். உயர்தவம் முற்றினார்
என்ற தொடர் 'சுதீக்கணன்' என்றபெயரினை (2657) விளக்கி நிற்கிறது.
இற்பிறந்தார் - நற்குடியில் பிறந்து இல்லறத்திலேவாழ்பவர்; உன்னின் -
ஆலோசித்தால் என்றுமாம், முனிவரின் அருளைப் பெற்றதால் என்னினும்
பேறு பெற்றவர் யாருமில்லை என்றான், தற்புகழ்ச்சியன்று.             30