பக்கம் எண் :

அகத்தியப் படலம் 99

சாத்திர நூல்களையும்; நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள்
இட்டு அரைத்தும் -
முறையே பயின்ற சிறந்த அறிவாகிய உயர்ந்த
அம்மியில் பலநாள் இட்டு அரைத்துஆராய்ந்தும்; அயனாலும் அறியாத
பொருள் நேர்நின்று உரைக்கு உதவும் -
பிரமனாலும் அதன்சிறப்பைக்
கண்டறிய முடியாத அப்பரம் பொருள் எதிரில் நின்று உரையாடற்கு அருள்
செய்யும்; எனும் உணர்ச்சியின் உவப்பான் - என்கின்ற அறிவால்
களிப்பவரானார்; ஆல் - அசை.

     பிரமன் முதலியவர்களும் வேதம் முதலிய நூல்களும் அறிதற்கு
முடியாத பரம்பொருள் கண்முன்நின்று பேசுதற்குரிய நற்பேறு வாய்த்ததே
என்ற உணர்ச்சியால் அகத்தியர் மனத்தில் மகிழ்ச்சிபொங்கியது. இயைந்த
பிற என்பவை அவ் வேதங்களின் பொருளை நன்கறிய உதவும் கருவி
நூல்களானமீமாம்சை, புராணம், நியாயம், தருமசாஸ்திரம் முதலியவை. மறை
முதலிய நூல்களாம் அம்மியைக்கொண்டு தன் ஞானமாம் கல்லில் இட்டு
அரைத்து என்றும் உருவகம் செய்வர். உரைக்குதவும் எனக்கொண்டு
தொடுத்தலைக் குறிப்பர்.                                        43

2674.'உய்ந்தனர் இமைப்பிலர்;
     உயிர்த்தனர் தவத்தோர்;
அந்தணர் அறத்தின் நெறி
     நின்றனர்கள்; ஆனா
வெந் திறல் அரக்கர் விட வேர்
     முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன்' என,
     தனி வலிப்பான்.

    (அவ்வகத்திய முனிவர்) ஆனா வெந்திறல் அரக்கர் விடவேர் முதல்
அறுப்பான் மருத்துவன்வந்தனன் -
நீங்காத கொடிய வலிமையுடைய
இராக்கதர் எனும் நஞ்சின் வேரை அடியோடுஅறுப்பதற்கு வைத்தியன்
போன்ற இராமன் இங்கு வந்துவிட்டான்; (ஆகையால்) இமைப்பிலர்
உய்ந்தனர் -
தேவர்கள் பிழைத்தார்கள்; தவத்தோர் உயிர்த்தனர் -
முனிவர்கள்உயிர் பெற்றார்கள்; அந்தணர் அறத்தின் நெறி
நின்றனர்கள் -
அந்தணர்கள் தருமமார்க்கத்தில் ஒழுகலாயினர்;
என(த்)தனி வலிப்பான் -
என்று தானே நன்றாகத்துணிபவனானான்.

     அரக்கராகிய நச்சு மரத்தை வேரோடறுக்க இராமன் வந்து
விட்டானாதலால் தேவர்கள்நல்வாழ்வும், முனிவர்கள் உயிரும், அந்தணர்கள்
அறநெறி வாழ்வும் பெற்றவராவர் எனத் துணிவுகொண்டார் அகத்தியர்.
திருமாலே தன்வந்தரியாகத் தோன்றிய ஆதி வைத்தியன் ஆதலாலும்பிறப்பு
முதலிய நோய்களைப் போக்குபவன் ஆதலாலும் மருத்துவன் என இராமன்
கருதப் பெற்றான்.உய்ந்தனர் முதலிய இறந்தகால வினை முற்றுக்கள் தெளிவு
பற்றி வந்த காலவழுவமைதி. உருவக அணி.                        44