பக்கம் எண் :

100கிட்கிந்தா காண்டம்

 கொடுத்ததுஉண்டு; இவன்
     கொண்டனன் கொலாம்?

     வல்லவர் -அறிவும் சொல்வன்மையும் உடைய அமைச்சர்கள்;
தடுத்து-சுக்கிரீவன் பிலத்தினுள் நுழையாதவாறு தடுத்து;தணிவு செய்து-
அவனைச் சமாதானப்படுத்தி;நோய் கெடுத்து - அவன் துயரமாகிய
நோயைப்போக்கி;மேலையோர் கிளத்து நீதியால் -முன்னையோர்
கூறியுள்ள நீதிமுறையைக் கொண்டு;அடுத்த காவலும் -அடுத்து வரத்தக்க
அரசாட்சியை;அரிகள் ஆணையால் - மற்ற வானரர்களின் கட்டளைப்படி;
கொடுத்தது உண்டு-
இவனுக்குக் கொடுத்தது உண்டு;இவன் கொண்டனன்
கொலாம் -
(ஆட்சியை) இவன் விரும்பித் தானாக கைக்கொண்டானோ?
(இல்லை).

     நோய் - அண்ணனுக்கு யாது ஆயிற்றோ என்ற கலக்கத்தால் ஏற்பட்ட
மனத்துயரம்; வல்லவர்களின் கட்டளையை மீற முடியாமல் சுக்கிரீவன் அரசை
ஏற்றுக்கொண்டானேயன்றி, அரசு பெறவேண்டும் என்ற வேட்கையால் அன்று
எனக் கூறிச் சுக்கிரீவனது தவறின்மையைத் தெளிவாகக் காட்டினான்.
சுக்கிரீவன் விரும்பி நாட்டைப் பெற்றதாக வாலி நினைத்து அவனைத்
துன்புறுத்தியதை எண்ணி, 'இவன் கொண்டனன் கொலாம்' என்றான்.  இவன்
கொண்டதில்லை என்பது கருத்தாகும்.                             56

3842.'அன்ன நாளில், மாயாவி,
     அப் பிலத்து,
இன்ன வாயினூடு எய்தும்
     என்ன, யாம்,
பொன்னின் மால் வரைப்
     பொருப்பு ஒழித்து, வேறு
உன்னு குன்று எலாம்
     உடன் அடுக்கினேம்.

     அன்ன நாளில் -அங்ஙனம் சுக்கிரீவன் அரசேற்றுக் கொண்ட அந்த
நாளில்;மாயாவி - மாயாவி;அப்பிலத்து -அந்தப் பிலத்திலிருந்து;இன்ன
வாயில் ஊடு
- இவ்வாயில் வழியாக;எய்தும் என்ன -இங்கு வருவான்
என்று அஞ்சி;யாம் -நாங்கள்;பொன்னின் மால் வரை பொருப்பு -
பொன் மயமான பெரிய மேருமலையாகிய மலையை மட்டும்;ஒழித்து -
விடுத்து; வேறு உன்னு குன்று எலாம் -வேறு மனத்தால் எண்ணக்கூடிய
மலைகள் அனைத்தையும்;உடன் அடுக்கினேம் -ஒன்று சேரக்
கொண்டுவந்து அப்பில வாயிலில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கினோம்.

     வாலியைக் கொன்ற மாயாவி, சுக்கிரீவனையும் கொல்ல இவ்வாயில்
வழியே வருவான் என்ற அச்சத்தால் அவன் வராவண்ணம் பிலவாயிலை
அடைத்துவிட்டோம் என்று வாயில் அடைத்ததற்குரிய காரணத்தைக்
கூறினான்அனுமன்.