கள் உண்டார்க்குக் களிப்பை உண்டாக்குதல் போல மாயாவியைக் கொன்ற வெற்றியும் களிப்பைத் தந்ததால் மாயாவியின் உயிரைக் கள்ளாக உருவகித்தான். அந்தக் கள்ளை உண்டால் வாலியின் மனமும் போதையுற்றது. சுக்கிரீவனுடைய உண்மைநிலை அறியாது மயங்கி உணர்ந்தமைக்கு இக்களிப்பே காரணம் என்பதை உணர்த்தவே 'களித்த வாலியும்' என்றான். இளவலார் - பண்படியாகப் பிறந்த பெயர்; அல் - பெயர்விகுதி. இகழ்ச்சி பற்றிப் பலர்பாலாக வந்தது. 'நன்று' என்பதும் நன்றன்று என்ற குறிப்பையே உணர்த்தியது. 'செய்தி காவல் நீ சிறிது போழ்து' என்ற வாலியின் கட்டளைக்குப் பணிந்திருக்க வேண்டியவன், காவலை விட்டதோடு, வாயிலையும் அடைத்தது பொருந்தாத செயல் எனக்கருதியதால் 'இருந்து அளித்தவாறு நன்று' என இகழ்வுபடப் பேசினான்வாலி. 59 | 3845. | வாலி விசைத்து, வான் வளி நிமிர்ந்தெனக் கால் விசைத்து, அவன் கடிதின் எற்றலும், நீல் நிறத்து விண் நெடு முகட்டவும், வேலை புக்கவும், பெரிய வெற்பு எலாம். |
அவன்-அவ்வாலி;வால் விசைத்து-தன் வாலை வேகமாகத் தூக்கி; வான் வளி நிமிர்ந்தென -வானத்தின்கண் பெருங் காற்று எழுந்தாற்போல; கால் விசைத்து -தன் காலை வீசி;கடிதின் என்றலும்- வேகமாய் உதைத்த அளவில்;பெரிய வெற்பு எலாம் -(பிலத்தை அடைத்திருந்த) பெரிய மலைகள் எல்லாம்;நீல் நிறத்து -நீல நிறமுடைய;விண் நெடு முகட்டவும் -ஆகாயத்தின் உயர்ந்த உச்சியை அடைந்தனவும்;வேலை புக்கவும் - கடலில் விழுந்தனவும் ஆயின. ஆயின எனும் வினை வருவித்துக்கொள்ளப் பட்டது. விசை - வேகம். நீலம் - நீல் என்றது கடைக்குறை. முட்ட, புக்க என்பன பலவின்பால் குறிப்பு வினை - யாலணையும் பெயர்கள். வாலியின் காலால் உதைக்கப்பட்ட மலைகளில் உயரச் சென்றவை விண்ணின் உச்சியை அடையவும், தாழச் சென்றவை கடலிலும் விழுந்தன. விசையுடன் ஒன்றைத் தாக்குகையில் விலங்குகள் தம் வாலை வேகமாக நிமிர்த்துக்கொள்ளும் இயல்பு இங்குக் கூறப்பெற்றது. 60 | 3846. | 'ஏறினான் அவன்; எவரும் அஞ்சுறச் சீறினான்; நெடுஞ் சிகரம் எய்தினான்; |
|