பக்கம் எண் :

104கிட்கிந்தா காண்டம்

     தன்னினும் முன்னவனாதலின் 'அண்ணல்' என்றும், யாவர்க்கும்
அரசனாதலின் 'இறைவ' என்றும் சுக்கிரீவன் விளித்தான்.  சுக்கிரீவன்
நேர்மையான வழியில் செல்பவனாதலின், வாலி கேட்பதற்கு முன்னரே தன்மீது
குற்றம் இல்லை என்பதை உணர்த்துதற்கு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு
வாலியிடம் கூறலாயினன்.  வாலிக்கு அமைச்சராய் இருந்தோர் கூறியதால்
அரசேற்க நேர்ந்தது என்பதால் 'நும்முடைக் கணங்கள்' என்றான்.  தான்
உண்மையில் வாலி சென்ற வழியிலே செல்ல நினைத்ததை 'உன் வழிப் படர
உன்னுவேற்கு' என்ற தொடரால் உணர்த்தினான்.  இணங்கர் - இணங்கு
என்னும் குற்றியலுகரம் 'அர்' என்னும் ஈறுபெற்றுப் போலியாயிற்று.  இறைவ
நும்முடை -  ஒருமை பன்மை மயக்கம்; மரியாதை பற்றி வந்ததால்
வழுவமைதி.                                                62

3848.''ஆணை அஞ்சி, இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை, நல்குவாய்;
பூண் நிலாவு தோளினை! பொறாய்! '' என,
கோணினான், நெடுங் கொடுமை கூறினான்.

     பூண் நிலாவு தோளினை -அணிகள் அசைந்து விளங்கும் தோள்களை
உடையவனே! ஆணை அஞ்சி -வானரர்களின் கட்டளையை மறுப்பதற்கு
அஞ்சி;இவ் அரசை எய்தி -இந்த அரசாட்சியை ஏற்று;வாழ் -வாழ்ந்து
வந்த;நாண் இலாத -நாணம் இல்லாத; என் நவையை -என் குற்றத்தை;
பொறாய் -
பொறுத்துக் கொள்வாய்;நல்குவாய் -அருள்வாய்;என - எனச்
சுக்கிரீவன் வேண்டவும்;கோணினான் -(வாலி) மனம் மாறுபட்டவனாய்;
நெடுங்கொடுமை கூறினான் -
மிகக் கடுமையான சொற்களைச் சொன்னான்.

     வானரர்களின் விருப்பப்படி நடந்துகொண்ட செயல் அண்ணன்
தன்னைத் தவறாக நினைப்பதற்கு இடம் அளித்ததால் 'நாணிலாத' என்றான்.
'தகாதன செய்தற்கண் உள்ளம் ஒடுங்குதல்' எனப் பரிமேலழகர் நாணத்திற்கு
இலக்கணம் சொன்னது கருத்தக்கது.  சிறிது காலம் வாலிக்குரிய அரசை
ஆண்டதால் 'நவை' என்று குறிப்பிட்டான்.  தன்னையும் அறியாது நிகழ்ந்த
செயலைக் கூறிப் 'பொறாய், நல்குவாய்' என மன்னிப்பு வேண்டினான்.
இங்ஙனம் நிகழ்ந்தது கூறி வேண்டியும் வாலி சினம் கொண்டான் ஆதலின்
குற்றம் வாலியுடையது என்பதை அனுமன் உணர்த்தினான்.             63

3849.'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங்
குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன்
கடல் கடைந்த அக் கரதலங்களால்,
உடல் கடைந்தனன்; இவன் உலைந்தனன்.

     அடல் கடந்த தோள் - பகைவரின் வலிமையைப் போரில் கடந்து
வெற்றிபெற்ற தோள்களை உடைய;அவனை அஞ்சி -வாலிக்குப் பயந்து;
வெங்டல் கலங்கி
- கொடிய குடல் கலங்கி;எம் குலம் ஒடுங்க -எம்
வானர இனம் முழுமையும் அஞ்சி ஒடுங்கிநிற்க;முன் கடல் கடைந்த-
முன்பு திருப்பாற்கடலைக் கடைந்த;அக்கரதலங்