கிளியின்மொழி மகளிர் மொழிக்கு இனிமையால் ஒப்புமை ஆயினும், சீதையின் மொழி கிளிமொழியினும் இனிமை பொருந்தியது என்பதால் 'கிளிப்படா மொழியவள்' என்றார். நீரிடை மீன்கள் மறைதல் இயல்பு எனினும், தம்மைக் காணநேரின் இராமபிரானுக்குச் சீதையின் கண்கள் நினைவிற்குவர வருந்துவானாதலின், அதைத்தவிர்க்க மீன்கள் மறைந்து ஒளிவதாகக் கற்பித்துக் கூறியதால் இஃது ஏதுத்தற்குறிப்பேற்ற அணியாம். கற்பின் வடிவமாகச் சீதை திகழும் நிலையைச் சுந்தரகாண்டத்தும் கம்பர் 'கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்' (6035) என்பர். 'துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்' என்றது இராமன் உலகியல் மனிதனாகத் துன்பங்களை அனுபவிப்பான் என்பதைஉணர்த்துகிறது. 9 | 3718. | கழை படு முத்தமும், கலுழிக் கார் மத மழை படு தரளமும், மணியும், வாரி, நேர் இழை படர்ந்தனைய நீர் அருவி எய்தலால், குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது; |
கழைபடு முத்தமும் - மூங்கிலிலிருந்து பெறும் முத்துக்களையும்; கலுழிக் கார்மதம்- கலங்கலாகிய கரிய மதநீர்ப் பெருக்கை உடைய; மழைபடு தரளமும்- மேகம் போன்ற யானையின் தந்தத்திலிருந்து தோன்றும் முத்துக்களையும்;மணியும் - (பிற) மணிகளையும்;வாரி -வாரிக்கொண்டு; நேர்இழை படர்ந்தனைய - தக்க அணிகலன்கள் தன்மேல் பரவிப் படிந்தது போன்ற;நீர் அருவி எய்தலால்- மலையருவி வந்து கலத்தலால்;குழைபடு முகத்தியர் - (அப்பொய்கை) காதணிகள் பொருந்திய முகத்தையுடைய மகளிரின்;கோலம் ஒப்பது - ஒப்பனையை ஒத்து விளங்கும். மூங்கிலிடமிருந்தும் யானைத்தந்தத்திடமிருந்தும் கிடைத்த முத்துக்களையும், மணிகளையும் வாரிக் கொணரும் அருவி நீர் தன்னிடத்துச் சேர்வதால், பொய்கையானது மகளிர் முத்தும், மணியும் பூண்டு கோலம் கொள்வதை ஒத்து விளங்கியது. உவமை அணி. மூங்கிலும் யானையும் முத்துப்பிறக்கும் இடங்கள் என்பது கவிமரபு. வெள்ளமானது முத்து, மணி முதலியவற்றை ஈர்த்து வரும் என்பதை ஆற்றுப்படலத்தும் (18) காணலாம். 10 | 3719. | பொங்கு வெங் கட கரி, பொதுவின் ஆடலின், - கங்குலின், எதிர் பொரு கலவிப் பூசலில் அங்கம் நொந்து அலசிய, விலையின் ஆய் வளை |
|