பக்கம் எண் :

14கிட்கிந்தா காண்டம்

     பெண் அன்னத்தைப் பிரிந்த சேவல் அன்னம் பொய்கையில் நீராடவரும்
தெய்வமங்கையரின் சிலம்பொலியைத் தனது  பெடையின் குரலென மயங்கிக்
கேட்கும் என்பது கருத்து.  மயக்க அணி. சீதையைப் பிரிந்த இராமனும்
அவளை நினைவு படுத்தக்கூடிய குரலைக் கேட்கின் மயங்குவதை இக்காட்சி
குறிப்பாக உணர்த்துகிறது.

     தான் என்றது சேவல் அன்னத்தினை; ஊன் - தசை - உடம்பிற்கு
ஆகுபெயர்; நூபுரம் - சிலம்பு; மழலை - இனிய மெல்லோசை; ஓர்த்தல் -
நுணித்தறிதல்; அன்பில் சிறந்தது அன்னப்பறவை 'ஆதரம் பெருகுகின்ற
அன்பினால் அன்ன மொத்தும்' (சீவக. 189) என்ற அடிகளைக் காண்க.
அன்னத்தின் ஒலிக்கு மகளிர் சிலம்பொலி உவமையாதல் 'அரங்கின் ஆடுவார்
சிலம்பின் அன்னம் நின்று இரங்கு வார்புனல் சரயு' என முன்னரும் (335)
கவிஞர் கூறியுள்ளார்.                                            14

3723.ஈறு இடல் அரிய மால் வரை
     நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில்
     ஆரம் ஆதிய
ஊறிட, ஒள் நகர்
     உரைத்த ஒண் தளச்
சேறு இடு பரணியின்
     திகழும் தேசது.

     ஈறு இடல் அரிய - (அப்பொய்கை) எல்லை கூற இயலாத; மால்வரை
நின்று -
பெரிய மலையிலிருந்து;ஈர்த்து இழி - இழுத்துக் கொண்டு
இறங்கிவரும்;ஆறு இடு - அருவிகள் இட்ட;விரை அகில் - மணம் மிக்க
அகில்;ஆரம் ஆதிய - சந்தனம் முதலிய (வாசனை மரங்கள்);ஊறிட -
(நீரில்) ஊறப்பெறுதலால்;ஒள்நகர் உரைத்த - செல்வம் மிக்க நகரமக்கள்
அரைத்த; ஒண்தளச்சேறு - ஒள்ளிய சந்தனக்குழம்பை;இடு பரணியின் -
இட்டு நிரப்பிய சந்தனக்கிண்ணம் போன்று;திகழும் தேசது - விளங்கும்
ஒளியுடையது.

     மலை அருவிகளால் கொண்டுவரப்பட்ட மரங்கள் தேய்ந்து ஊறியதால்
அப்பொய்கை கலவைச்சந்தனம் கூட்டி வைத்திருக்கும் கிண்ணத்தை ஒத்து
விளங்கியது; இஃது உவமை அணி. பொய்கைக்குப் பரணியும், அதிலுள்ள
மரங்களின் தேய்வையால் குழம்பிய நீர்க்குச் சந்தனக் குழம்பும் உவமைகளாம்.
நகரத்திற்கு உரிய சந்தனம் என்பதால் 'ஒள்நகர் உரைத்த' எனப்பட்டது.
செல்வமுடைய நகரமக்களே சந்தனம் முதலிய மணப்பொருள்களைக் கொண்டு
இன்பம் நுகர்வர்.

     பரணி - சந்தனக் கிண்ணம்; நகர் - இடவாகுபெயர். தளம் - சீதளம்
என்பதன் முதல் குறை, ''வெண்டளக் கலவைச்சேறு' என்பது நாட்டு
வருணனை.(43)                                                15

பொய்கையில் நிகழும் செயல்கள்

கலித்துறை

3724.நவ்வி நோக்கியர் இதழ் நிகர்
     குமுதத்து நறுந் தேன்