பரத்தின் நீங்கா அரச அளித்த ஆழியாய்!'' என்று இராமனும் (2437) ''தயிர் உடைக்கும் மத்து என்ன உவகை நல சம்பரனைத் தடிந்த அந்நாள்'' (2712) என்று சடாயுவும் குறிப்பிடுதல் காண்க. அந்தகன் - கண்ணில்லாதவன் (கருணையற்றவன்) யமன். 24 | 3925. | '''விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல், வரும் பழி'' என்று, யான் மகுடன் சூடலேன்; கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கைக் கொள, பெரும் பழி சூடினேன்; பிழைத்தது என் அரோ?' |
விரும்பு எழில் -யாவரும் விரும்பத்தக்க அழகுடைய;எந்தையார் - என் தந்தையாரின்;மெய்ம்மை வீயுமேல் -சத்தியம் அழியுமானால்;வரும் பழி என்று -அதனால் எனக்குப் பழியுண்டாகும் என்று;யான் மகுடம் சூடலேன் -நான் முடிசூடிக் கொள்ளவில்லை;கரும்பு அழி சொல்லியை - கரும்பைச் சுவையில் அழியச் செய்யும் இனிமை மிகு சொற்களை உடைய சீதையை;பகைஞன் கைக்கொள -பகைவனான இராவணன் கவர்ந்து செல்ல (இப்போது);பெரும்பழி சூடினேன் -பெரிய பழியை அணிந்து கொண்டேன்; பிழைத்தது என் -நான் பழியினின்று நீங்கியது எவ்வாறு? வாய்மை தவறினால் தந்தைக்கு உண்டாகும் பழிக்கஞ்சி மகுடம் சூடாது வனத்திற்கு வர, வனத்தில் சீதையை அரக்கன் பற்றிச் செல்லத் தனக்குப் பெரும் பழி ஏற்பட்டது என இராமன் வருந்தினான். ஒரு பழி வராமல் தடுக்க முயன்றவனுக்கு மற்றொருவகையில் பழி வந்துற்றதால் பழி பெறுவதனின்று தன்னால் தப்பிக்க இயலாதோ என்பதால் 'பிழைத்தது என்?' என்றான். தன்குல முன்னோர் அருமையை நினைக்கும் இராமன் குலப்பெருமையைக் காப்பதில் கருத்துடையவனாக இருந்தான் என்பதை அறியமுடிகிறது. அதனால் தான் 'பரிதி வானவன் குலத்தையும், பழியையும் பாரா, சுருதி நாயகன் வரும் வரும்'' எனச் (5077) சீதையும் நம்பிக்கையுடன் இருந்தாள். கரும்பு அழி சொல்லி - சீதையைக் குறித்தது. இராவணன் சீதையைக் 'கரும்பு உண்ட சொல் மீள்கிலன்' (3420) என்றமையும் காண்க. அரோ -ஈற்றசை. 25 இராமன் துயரால் மீண்டு சோர்ந்தது கண்டு சுக்கிரீவன் தேற்றம் | 3926. | என்ன நொந்து, இன்னன பன்னி, ஏங்கியே துன்ன அருந் துயரத்துச் சோர்கின்றான்தனை, |
|