பக்கம் எண் :

கலன்காண் படலம் 163

     ஆணையாய் -எங்கும் செல்லத்தக்க ஆணைச் சக்கரத்தை
உடையவனே! கொடுந்தொழில் வாலியைக் கொன்று -கொடிய வலிமையை
உடைய வாலியை (முதலில்) கொன்று;கடுங் கதிரோன் மகன் -வெப்பம்
மிக்க கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவனை;கோமகன் ஆக்கி -
அரசனாகச் செய்து;கைவளர் நெடும்படை -செயல்திறம் மிக்க பெரிய
படையினை;கூட்டினால் அன்றி -சேர்த்தால் அல்லாது;அடும்படை -
அழிக்கும் படைகளை உடைய;அரக்கர்தம் இருக்கை -அரக்கர்கள் வாழும்
இடம்;நேட அரிது -தேடிக் கண்டு பிடிக்க அரிதாகும்.

     உலகம் முழுவதும் ஆட்சி செலுத்தும் திறம் இராமனுக்கே உரியது
என்பதால் 'ஆணையாய்' என விளித்தான்.  சீதையைத் தேடுதற்குப் பெரிய
படை தேவையாதலால்,  அதற்குச் சுக்கிரீவனை அரசனாக்கினால், அவன்
கிட்கிந்தை ஆட்சியின் பெரும்படையைப் பணிகொள்ளமுடியும்.  செயல்திறம்
மிக்க கிட்கிந்தைப் படையை ஏவிச் சீதையைக் கண்டு பிடிக்கலாம் என்பது
அனுமன் கருத்து.                                              29

3930.'வானதோ? மண்ணதோ?
      மற்று வெற்பதோ?
ஏனை மா நாகர்தம் இருக்கைப்
     பாலதோ? -
தேன் உலாம் தெரியலாம்! -
      தெளிவது அன்று, நாம்,
ஊன் உடை மானிடம்
      ஆனது உண்மையால்!

     தேன் உலாம் தெரியலாய் - வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலை
அணிந்தவனே! வானதோ -(இராவணன் முதலிய அரக்கர் உள்ள இடம்)
வானத்தில் உள்ளதோ? மண்ணதோ -மண்ணுலகத்தில் உள்ளதோ?மற்று
வெற்பதோ -
(அன்றி) வேறு மலைகளிடத்து உள்ளதோ?ஏனை
மாநாகர்தம்-
இவற்றினும் வேறான பெரிய நாகர்கள் வாழும்;இருக்கைப்
பாலதோ -
பாதாள உலகில் உள்ளதோ?நாம் - -;ஊனுடை மானிடம்
ஆனதுஉண்மையால் -
ஊனால் ஆய மனிதப் பிறவியினராய் இருப்பதால்;
தெளிவதுஅன்று- (இன்ன இடத்தது என்று) தெளிவாக அறிந்து கொள்ளக்
கூடியதன்று.

     மனிதர்களுக்குத் தேவர்களைப்போல இருந்த இடத்திலிருந்து பிற
உலகங்களில் நிகழ்வன பற்றி அறிந்து கொள்ளும் திறம் இல்லாமையால்
'மானுடமானது உண்மையால தெளிவது அன்று' என்றான்.  எனவே, பலர் பல
இடங்களுக்குச் சென்று தேட வேண்டியிருப்பதால் பெரும்படை வேண்டும்
எனக் குறிப்பாக உணர்த்தினான்.  வானரரையும் மனித இனத்தின் ஒரு
வகையினர் என்ற கருத்தால் 'நாம் ஊனுடை மானுடன்' என இணைத்துக்
கூறினான்.  உருவத்தால் வானரங்களாக இருப்பினும் பேச்சு, செயல்
ஆகியவற்றில் மனிதர்களாக இருப்பதாலும் இங்ஙனம் கூறினன் எனலாம்.
''விலங்கு அலாமை விளங்கியது; ஆத