வேண்டும்;ஒரு முறையே -(அதனால்) ஒரே சமயத்தில்;உலகம் யாவை யும் பரவி -எல்லா உலகங்களுக்கும் சென்று பரவி;திருஉறை -சீதை தங்கியிருக்கின்ற;வேறு இடம் -வேறிடத்தை;தேர வேண்டும் -தேடி அறிய வேண்டும். அரக்கர்கள் கணப்போதில் பல உலகங்களுக்குச் சென்று திரும்புவர் ஆதலின், ஒரு புறத்தே சென்று சீதையைத் தேடுகையில் அவர்கள் வேறுபுறம் கொண்டு மறைப்பார். ஒவ்வோர் இடமாய்த் தேடிச் செல்ல உலகமும் பெரிது; தேடுதற்கு ஆண்டுகள் பலவாகும். எனவே, ஒரே நேரத்தில் உலகெங்கும் பிரிந்து சென்று தேடுதல் வேண்டும் என்று அனுமன் உரைத்தான். திரு என்றது சீதாபிராட்டியை; வரன்முறை - வரிசைப்படி; யாவையும் - முற்றும்மை. 32 | 3933. | 'ஏழு பத்து ஆகிய வெள்ளத்து எம் படை, ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால்; ஆழியைக் குடிப்பினும், அயன் செய் அண்டத்தைக் கீழ் மடுத்து எடுப்பினும், கிடைத்த செய்யுமால். |
ஏழு பத்து ஆகிய வெள்ளத்து-எழுபது வெள்ளம் என்ற அளவினை உடைய;எம்படை -எங்கள் வானரப் படை;ஊழியில் கடல் என -யுக முடிவுக் காலத்தில் பொங்கி எழும் கடல் போல;உலகம் போர்க்கும் - உலகம் முழுவதும் பரவி மூடவல்லது;ஆழியைக் குடிப்பினும் -(மற்றும்அது) கடலைக் குடிக்க வேண்டுமென்றாலும்;அயன் செய் அண்டத்தை - நான்முகனால் படைக்கப் பெற்ற பிரமாண்டத்தை;கீழ் மடுத்து எடுப்பினும் - கீழே கையைச் செலுத்திப் பெயர்த்து எடுக்க வேண்டுமென்றாலும்;கிடைத்த செய்யும் -இட்ட கட்டளையை ஏற்றுச் செய்யும். வானரப்படையின் மிகுதியும், ஆற்றலும் கட்டுப்பாடும் இப்பாடலில் உணர்த்தப்பட்டன. வெள்ளம் - ஒரு பேரெண். இவ்வெண்ணிக்கை முன்னரும் 'வெள்ளம் ஏழு பத்து உள்ள' (3831) என அனுமனால் குறிக்கப்பட்டது. வானரப் படைகள் எதையும் செய்யவல்லன என அனுமன் உரைப்பது 'மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே, வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவனே' எனும் (பட்டினப் 271 - 273) கரிகாலன் வீரச்செயலோடு ஒப்பிடத்தக்கது. 33 வாலி இருக்கும் இடத்திற்குச் செல்லுதல் | 3934. | 'ஆதலால், அன்னதே அமைவது ஆம் என, |
|