பக்கம் எண் :

பம்பை வாவிப் படலம்17

     பெய்தல் -அணிதல்; கலன்கள் - அணிகலன்; செய்கை அன்னம் -
செயற்கை அன்னம் - விளையாடுதற்குரிய பதுமை; வானரமகளிர் நாள்தொறும்
வந்து நீராடுவர் என்றதனால் பம்பையின் பெருமைபுனலாம்.            18

3727.ஏலும் நீர் நிழல், இடை
     இடை எறித்தலின், படிகம்
போலும் வார் புனல் புகுந்துளவாம்
     எனப் பொங்கி,
ஆலும் மீன் கணம் அஞ்சின
     அலம்வர, வஞ்சிக்
கூல மா மரத்து, இருஞ் சிறை
     புலர்த்துவ - குரண்டம்.

     ஏலும் நீர் -பொருந்திய நீரில்;நிழல் இடை இடை எறித்தலின் -
(மரங்களிலுள்ள கொக்குகளின்) நிழல் இடையிடையே விளங்குதலாலே;படிகம்
போலும் வார்புனல் -
பளிங்கு போன்று விளங்கும் மிக்க நீரினுள்;
புகுந்துளவாம் என -
(கொக்குகள் தம்மை உண்ணப்) புகுந்துள்ளன என்று
எண்ணி;பொங்கி ஆலும் மீன்கணம் -(இயல்பாகத்) துள்ளி விளையாடும்
மீன் கூட்டங்கள்;அஞ்சின அலம்வர -அஞ்சி வருத்தமடையுமாறு;
குரண்டம் -
கொக்குகள்;வஞ்சிக் கூலமா மரத்து -கரையிலுள்ள பெரிய
வஞ்சி மரத்திடை;இருஞ்சிறை புலர்த்துவ -(தம்) பெரிய சிறகுகளை
உலர்த்திக் கொண்டிருப்பனவாயின.

     கரையருகே உள்ள மரங்களில் கொக்குகள் தம் சிறகுகளை உலர்த்திக்
கொண்டிருக்க, அவற்றின் நிழல் நீரில்பட, அந்நிழலைக்கண்ட மீன்கள் தம்மை
உண்பதற்காக நீரினுள் கொக்குகள் புகுந்துவிட்டன என்றெண்ணி மயங்கின
என்பதாம்; மயக்க அணி.

     தெளிவுடைமை பற்றிப் பளிங்குபோலும் புனல் என்றார்.  குரண்டம் -
கொக்கு; கூலம் - கரை; வஞ்சி - மரவகையுள் ஒன்று.                  19

3728.அங்கு ஓர் பாகத்தில், அஞ்சனமணி
     நிழல் அடைய,
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து
     ஒளி பாய,
கங்குலும் பகலும் மெனப்
     பொலிவன கமலம்;
மங்கைமார் தட முலை எனப்
     பொலிவன, வாளம்.

     அங்கு ஓர் பாகத்தில் -அப்பொய்கைக் கரையின் ஒரு பக்கத்தில்;
அஞ்சன மணி நிழல் அடைய -
நீலமணியின் ஒளி படிவதாலும்;பங்கு
பெற்ற ஒளிர் பதுமராகத்து ஒளி பாய -
மற்றொரு பகுதியில்