| | முள்கிடும் குழியில் புக்க மூரி வெங் களி நல் யானை தொள்கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்து சோர்வான். |
வெள்கிடும் -(வாலிதன் நிலையை எண்ணி) நாணம் கொள்வான்; மகுடம் சாய்க்கும் -(நாணத்தால்) கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்; வெடிபடச் சிரிக்கும் -வெடிப்பதுண்டது போல சிரிப்பான்;மீட்டும் உள்கிடும் -நடந்ததைக் குறித்து மீண்டும் சிந்திப்பான்;இதுவும் நான் ஓர் ஓங்கு அறமோ - 'இப்படி அம்பு செலுத்துதலும் ஒரு சிறந்த தருமமாகுமோ?' என்று உன்னும் -என்று எண்ணுவான். முள்கிடும் குழியில் -முழுகி அழுந்தத் தக்க படுகுழியில்;புக்க மூரி வெங் களி நல் யானை -(வீழ்ந்து) அகப்பட்டு கொண்ட வலிய கொடிய மதங் கொண்ட சிறந்த யானை; தொள்கொடும் கிடந்தது என்ன -சேற்றுடன் கிடந்தது போல;துயர் உழந்து அழிந்து சோர்வான் -துன்புற்று தன் வலிமை அழிந்து தளர்ச்சி அடைவான். வீழ்ந்த வாலியின் மனநிலையைப் பாடல் புலப்படுத்தும். இராமன் அறத்தின் வடிவம் என்று வாலி எண்ணியதால் 'இப்படி அம்பு செலுத்துவதும் ஒரு சிறந்த அறமாகுமா?' என எண்ணி மயங்கினான். முள்கிடுங்குழி - பெரும் பள்ளம், படுகுழி. யானை பிடிப்போர், பள்ளம் தோண்டிப் பழக்கிய பெண் யானையை ஒருபுறம் நிறுத்தி வைக்க, ஆண் யானை, பிடியைச் சேரும் ஆர்வத்தில் விரைந்து வந்து குழியி்ல் விழ; அதனைப்பிணித்து மேலேற்றிச் செல்வர். அவ்வாறு இராமன் செய்த தந்திரத்தால் வாலி அகப்பட்டு வருத்தலாயினன். உவமை அணி. தொள்கு - சேறு; வலை எனலுமாம். முன் பாடலில் புன்சிரிப்புச் (நகை வர) சிரித்தவன் இங்கு வெடிபடச் சிரித்தான் என்றது காண்க. 81 இராமன் வாலியின் எதிர்வந்து தோன்றலும் அவனை வாலி இகழ்தலும் | 4016. | 'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின், முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர், மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு முன்னம் சொல்லும் துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, |
இறை திறம்பினனால் - தலைமைத் தன்மை உடைய இராமன் முறை தவறினன் என்றால்;இழிந்துளோர் இயற்கை என்னே -(இனி) இழிந்தோராகிய சிறியார் இயல்பு என்னாகும்?என்னின் முறை திறம் பின்னால் -அதுவும் என் திறத்தின் நீதிமுறை தவறினானே!என்று |