பக்கம் எண் :

276கிட்கிந்தா காண்டம்

பறை அடித்துக் கொள்வது போலத் துடிக்கின்ற;அந்தப் பயம் -அந்த
அச்சமானது;அறப் பறந்தது அன்றே -(இப்பொழுது நீ இறத்தலால்)
முழுவதும் போய்விட்டதல்லவா?

     தறையடித்தல் - ஆணி அறைதல்.  எட்டுத்திக்கு யானைகள் இடம்
பெயராமல் நின்றமைக்குத் 'தறை அடித்தது போல்' என்றது உவமை.  கறை
அடி - உரல் போலும் அடிகளை உடையது என அன்மொழித் தொகையாய்
யானையைக் குறித்தது.  கண்டகன் - முள் போன்ற கொடிய செயலை உடைய
இராவணன்.  அரக்கர்களைக் கண்டகர் எனக் கூறுவதை, 'கண்டகர்' இடிநிகர்
வினையம்' (187).  'கண்டகர் மெய்க்குலம்' (2998), கண்டகர் உய்ந்தார் உவர்
(3247) ஆகிய இடங்களிலும் காணலாம்.  தன்னைத் தாக்கிய எட்டுத் திசை
யானைகளின் தந்தங்கள் தனது மார்பில் தாங்கி ஒடியும் படி அவ் யானைகளை
வென்று அடக்கினான் ஆதலின் அவனைக் 'கறையடிக்கு அழிவு செய்த
கண்டகன்' என்றான்.  நிறையடிக் கோல வால் - வாலின் அழகு பற்றியே
அவனுக்கு 'வாலி' எனப் பெயர் வந்தது என்பது நோக்கத்தக்கது.  அந்த
வாலியின் எண்திசை யானைகளை வென்ற இராவணனைப் பிணித்தான் வாலி.
அந்த வாலை நினைத்த மாத்திரத்தே இராவணன் நெஞ்சு பதறும்.  அங்ஙனம்
இராவணன் வாலை நினைத்துப் பதைக்கும் இயல்பை அனுமன்
நகைச்சுவையாக 'வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்ததன்றே'
(5888) என்று கூறல் காண்க.  இராவணன், வாலியின் வாலால் கட்டுண்ட
செய்தியை 'இந்திரச் செம்மல் பண்டோர் இராவணன் என்பான் தன்னை,
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச், சிந்துரக் கிரிகள் தாவித்
திரிந்தனன்' (6997) எனப் பின்னர் அங்கதன் உரைப்பதும் காண்க.  'நீலமா
மணிநிறத் தரக்கனை இருபது கரத்தொடொல்க வாலினால் கட்டிய வாலியார்'
(3-91-8) எனத் திருஞானசம்பந்தரும் பாராட்டுவார்.  இத்தகைய வாலியின்
வால் வலிமை கூறி அங்கதன் வருந்தினான்.                       150

4085.'குல வரை, நேமிக் குன்றம்,
      என்ற வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும், நின் பொன் - தாளின்
      தழும்பு, இனி, தவிர்ந்த அன்றே?
மலை கொளும் அரவும், மற்றும்,
      மதியமும், பலவும் தாங்கி,
அலை கடல் கடைய வேண்டின்,
      ஆர் இனிக் கடைவர்? - ஐயா!

     ஐயா - ஐயனே!குலவரை -(எட்டுத்திசைகளிலும் உள்ள) எட்டுக் குல
மலைகள்;நேமிக் குன்றம் -சக்கரவாளகிரி;என்ற வானுயர்ந்த -என்று
பெயர் சொல்லப்பெற்று வானோங்கிய;கோட்டின் தலைகளும் -மலையின்
சிகரங்களும்;நின் பொன் தாளின் தழும்பு -நின் அழகிய பாதங்களை
வைத்தால் பதியும் அடிச்சுவடாகிய தழும்பினை;இனி, தவிர்ந்த அன்றே -
இனி நீங்கப் பெற்றன அல்லவா?மலை கொளும் அரவும் -மந்தர மலை
எனும் மத்தினைச் சுற்றி வளைத்துக் கொள்ளவல்ல வாசுகி என்னும்
பாம்பினையும்;மதியமும் -(அடை தூணாகிய) சந்திரனையும்;பலவும்
தாங்கி-
(அடைகல்லாகிய