பக்கம் எண் :

28கிட்கிந்தா காண்டம்

இப்பொய்கை நீரில் மூழ்கி;உன் இசையென நீண்டவன் -உன் புகழைப்
போல வளர்ந்த திருமாலின்;கழல் தாழ் - திருவடிகளை வணங்குவாயாக';
என்றான் -
என்று வேண்டினான்.

பொழுது கழிந்தது அறியாது இராமன் வருந்த, இலக்குவன் இவ்வாறு கூறினான்.
பிற அணிகள் உடம்பை அழகு செய்ய, அன்பு எனும் அணி உயிரை அழகு
செய்கிறது.  அணி - காரணப்பொதுப்பெயர்.   34

3743.அரைசும், அவ் வழி நின்று
     அரிது எய்தி, அத்
திரை செய் தீர்த்தம், முன்
     செய் தவம் உண்மையால்,
வரை செய் மா மத
     வாரணம் நாணுற,
விரை செய் பூம் புனல்
     ஆடலை மேயினான்.

     அரைகம் -இராமபிரானும்;அவ்வழி நின்று அரிதுஎய்தி -அந்த
இடத்திலிருந்து அரிதாகச்சென்று;அத்திரை செய் தீர்த்தம் -அலைமோதும்
அந்த பம்பைப் பொய்கை நீர்;முன்செய்தவம் உண் மையால் -முன்செய்த
தவமுடைமையால்;வரைசெய் மாமத வாரணம் நாணுற -மலை போன்றதும்
பெரும் மதப்பெருக்குடையதுமான யானையும் நாணும்படி;விரைசெய்
பூம்புனல் -
மணம் கமழும் மலர்கள் நிறைந்த நீரில்;ஆடல் மேயினான்-
நீராடுதலை மேற்கொண்டான்.

     தானும் தூயதாய்த் தன்னிடம் நீராடுவார் துயர்நீக்கித் தூய்மை நல்கும்
சிறப்புடையது தீர்த்தமாகும். அத்தகைய சிறப்புடைய பொய்கை இராமன்மேனி
முழுவதும் படியப்பெறும் சிறப்பினைப் பெற்றது.  அதற்கு முன் செய்த
தவப்பயன் காரணம் என்பதால் 'திரைசெய் தீர்த்தம் முன் செய் தவம்
உண்மையால்' என்றார். இராமன் நீராடியதற்கு ஒரு மதயானை நீரில் ஆடியது
ஒப்பாகும்.

     அரைசு - அரசு என்பதன் போலி.                            35

3744.நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்,
தீத்த காமத் தெறு கதிர்த் தீயினால்,
காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்,
தோய்த்த தண் புனல் ஒத்தது, அத் தோயமே.

     நெடியவன் -இராமன்;நீத்தம் நீரில்- பொய்கையின் வெள்ள நீரில்;
மூழ்கலும்
- முழுகின அளவில்;தீத்த -(அவன் திருமேனியை) வெதுப்பிய;
காமத் தெறுகதிர்த்தீயினால் -
காமமாகிய அழிக்கின்ற சுடர்விட்டு எரியும்
நெருப்பினால்;அத்தோயம் -அப்பொய்கை நீர்;கருமகக்கம்மியன் -
இரும்பு வேலை செய்பவனாகிய கருமான்;