பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 291

4104.'செரு ஆர் தோள! நின்
      சிந்தை உளேன் எனின்,
மருவார் வெஞ் சரம்
      எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை
      ஆகின், உய்தியால்;
இருவே முள்
      இருவேம் இருந்திலேம்.

     செரு ஆர் தோள -போர்த் தொழில் வல்ல தோள்களை உடை
யவனே!நின் சிந்தை உளேன் எனில் -உன்னுடைய மனத்தில் யான்
இருப்பது உண்மை என்றால்;மருவார் வெஞ்சர் -பகைவரது கொடிய அம்பு;
என்னையும் வவ்வும் -
என்னுயிரையும் கொன்றிருக்கும;ஒருவேன் உள்
உளை ஆகின் -
தனியளாகிய என் நெஞ்சில் நீ நீங்காது இருப்பவனாயின்;
உய்தி -
நீ இறவாது பிழைத்திருப்பாய்.  இருவேம் உள் -(அதனால்) ஒருவர்
உள்ளத்தில் ஒருவராக;இருவேம் இருந்திலேம் -நாம் இருவரும் இருந்தோம்
அல்லோம்.

     வாலியும் தாரையும் ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் இருந்தனர் எனக்
கூறத்தக்க அன்பு வாழ்க்கை நடத்தினர் எனத் தெரிகிறது.  'உன்னடைய
மனத்தில் நான் இருந்திருந்தால் உன்னைத் தாக்கிய அம்பு என்னைத்
தாக்கியிருக்கும்.  அல்லது என் மனத்தில் நீ இருபபது உண்மையானால் யான்
பிழைத்திருப்பதால் நீயும் பிழைத்திருப்பாய்.  இவ்விரண்டினுள் எதுவும்
நிகழாமையை எண்ணுகையில் ஒருவர் சிந்தையில் மற்றொருவர் இருந்தனம்
எனும் மொழி உண்மையாகாது என்ன மற்றன்ன, மடந்தையொடு எம்மிடை
நட்பு (குறள் - 1122) என்ற குறள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.       170

4105.''எந்தாய்! நீ அமிழ்து ஈய, யாம் எலாம்
உய்ந்தேம்'' என்று, உபகாரம் உன்னுவார்,
நந்தா நாள்மலர் சிந்தி, நண்பொடும்
வந்தாரா எதிர், வான்உளோர் எலாம்?

     வான் உளோர் எலாம் -விண்ணுலகில் வாழ்கின்ற தேவர்க
ளெல்லாரும்;உபகாரம் உன்னுவார் -நீ செய்த பேருதவியை மறவாது
நினைப்பவராய்;'எந்தாய் -'எம் தந்தை போன்றவனே!நீ அமிழ்து ஈய -
பாற்கடலைக் கடந்து நீ உண்ணாமல் அமுதத்தை எமக்குக் கொடுக்க;யாம்
எலாம் உய்ந்தேம் -
நாங்கள் எல்லோரும் அதனை உண்டு இறவா நிலை
பெற்றோம்';என்று -என்று உன்னைப் புகழ்ந்து;நந்தா நாள் மலர் சிந்தி -
வாடாத அப்பொழுது அலர்ந்த (கற்பகம் முதலிய) மலர்களைத் தூவி;
நண்பொடும் -
நட்புரிமையோடு;எதிர் வந்தாரா -எதிர் கொண்டழைக்க
வந்தார்களோ?