| சந்த வார் கொங்கயாள் தனிமைதான் நாயகன் சிந்தியா, நொந்து தேய் பொழுது, தெறு சீத நீர் இந்து வான் உந்துவான், எரி கதிரினான் என. |
அந்தியாள் -அந்திப்பொழுதாகிய பெண்;வந்துதான் அணுகவே - வந்து சேரவே;அவ் வயின் - அப்போது;சந்தவார் கொங்கையாள் - அழகிய கச்சணிந்த தனங்களை உடைய சீதை;தனிமைதான்- பிரிந்து தனியே இருக்கும் நிலையினை;நாயகன் சிந்தியா - இராமன் நினைத்து; நொந்து தேய்பொழுது- மனம்வருந்தி வாடும் போது;தெறுசீத நீர் இந்து- வருததுகின்ற குளிர்ந்த தன்மையை உடைய சந்திரன்;எரி கதிரினான் என- வெய்ய கதிர்களை உடைய சூரியன் போல;வான் உந்துவான் -வானத்தில் எழுவானாயினான். அந்தியாள் - மாலைக்காலமாகிய பெண்; 'அந்தியென்னும் பசலை மெய்யாட்டி' என்பது மணிமேகலை. (5-140). பிரிந்தார்க்குக் குளிர்ந்த பொருள்களுக்கு வெப்பம் தருமாதலின் சந்திரனும் சூரியன்போல வெப்பமுண்டாகத் தோன்றினான் என்றார். 'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலைமலரும் இந்நோய்' (குறள் 1227) என்றபடி மாலையில் ஆசை மிகுதியால் இராமனுக்குத் தனிமைத்துன்பம் அதிகமாயிற்று. என - உவம உருபு. 38 3747. | பூஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்; மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள் நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள் கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. |
பூ ஒடுங்கின -(இரவு வருதலும்) மலர்கள் குவிந்தன;பொழில்கள் - சோலைகளில்;விரவுபுள் ஒடுங்கின -வந்து கலந்த பறவைகள் தத்தம் இடங்களில் போய் அடங்கின;மா ஒடுங்கின -விலங்குகள் தம் செயல் அடங்கின;மரனும் இலை ஒடுங்கின -மரங்களும் இலைகள் குவியப் பெற்றன;கிளிகள் நா ஒடுங்கின-கிளிகள் பேசுதல் இன்றி அடங்கின; மயில்கள் நா ஒடுங்கின -மயில்கள் ஆடுதல் ஒழிந்தன;குயில்கள் கூ ஓடுங்கின- குயில்கள் இனிமையாகக் கூவுதலை நிறுத்தின;களிறு பிளிறு குரல் ஒடுங்கின- யானைகள் பிளிறுதலாகிய பேரொலி அடங்கின. |