| இப்போதே கொணர், இன்ன செய் வினைக்கு ஒப்பு ஆம் யாவையும், என்று உணர்த்தலும், |
அருள் நின்ற அண்ணலும் -இராமன் கட்டளைப்படி நடக்கும் பெருமையில் சிறந்த இலக்குவனும்;அப்போதே -அப்பொழுதே; மெய்ப்போர் மாருதி தன்னை -அறநெறி தவறாமல் போரைச் செய்ய வல்ல அனுமனைப் பார்த்து;'வீர நீ - வீரனே! நீ;இன்ன செய் வினைக்கு -இந்த (முடிசூட்டு விழாச்) செயலுக்கு;ஒப்பு ஆம் யாவையும் -வேண்டிய எல்லாப் பொருள்களையும்;இப்போதே கொணர் -இப்பொழுதே கொண்டு வந்து சேர்ப்பாய்';என்று உணர்த்தலும் -என்று கூறியவுடன் . . . . அருள் நின்ற -இராமனது அருள்மொழியாகிய ஆணை வழி நின்ற என்க. இதுவும் அடுத்த செய்யுளும குளகம்; 4119 ஆம் செய்யுளில் உள்ள 'சூட்டினான்' என்ற வினை கொண்டு முடியும் 3 4118. | மண்ணும் நீர் முதல் மங்கலங்களும், எண்ணும் பொன் முடி ஆதி யாவையும், நண்ணும் வேலையில், நம்பி தம்பியும், திண்ணம் செய்வன செய்து, செம்மலை, |
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் -(சுக்கிரீவனை) நீராட்டுவதற்கு வேண்டிய புண்ணிய தீர்த்தம் முதலான மங்கலப் பொருள்களும்;எண்ணும் பொன்முடி ஆதி யாவையும் -எல்லோராலும் நன்கு மதிக்கப்படும் பொன்னால் செய்த மணிமுடி முதலிய எல்லாப் பொருள்களும்;நண்ணும் வேலையில் -வந்த சேர்ந்த அளவில்;நம்பி தம்பியும் -சிறந்தவனான இராமனின் தம்பி இலக்குவனும்;செம்மலை -பெருமையுடைய சுக்கிரீவனுக்கு; திண்ணம் செய்வன செய்து -(முடிசூட்டும் முன்) தவறாது செய்யவேண்டிய செயல்களைச் செய்து.... மண்ணும் நீர் முதல் மங்கலம் - மங்கல நீராடலுக்கு வேண்டிய நீர் முதலியன. செம்மலை - உருபு மயக்கம். 4 4119. | மறையோர் ஆசி வழங்க, வானுளோர் நறை தோய் நாள்மலர் தூவ, நல் நெறிக்கு இறையோன்தன் இளையோன், அவ் ஏந்தலை, துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான். |
மறையோர் ஆசி வழங்க -வேதம் அறிந்த அந்தணர்கள் வாழ்த்துக் கூற;வானுளோர் -தேவலோகத்திலுள்ள தேவர்கள்;நறைதோய் நாள்மலர் தூவ -தேன் நிறைந்த அன்றலர்ந்த மலர்களைத் தூவ;நல் நெறிக்கு இறையோன் தன் -சிறந்த ஒழுக்கத்திற்குத் தலைவனான இராமனுடைய; இளையோன் -தம்பியான இலக்குவன்;அவ் ஏந்தலை - |