| கங்குல் இற்றது; கமலம் முகம் எடுத்தன; - கடலின் வெங் கதிர்க் கடவுள் எழ, விமலன் வெந் துயரின் எழ. |
விமலன் - குற்றமற்றவனாகிய இராமபிரான்; வெந்துயரின் எழ - கொடிய துன்பத்தினின்று நீங்கும்படி;கடலின் வெங்கதிர்க்கடவுள் -கடலில் வெய்யகதிர்களை உடைய கதிரவன்;எழ - உதிக்க;பொங்கி முற்றிய உணர்வு - நிரம்பி முதிர்ந்த மெய்யறிவு; புணர்தலும் -வந்து சேர்கையில்; புகையினொடு- புகையுடன்; பங்கம் உற்று அனைய வினை -சேறும் சேர்ந்தாற்போன்ற தீவினைகள்;பரிவுறும்படி -துன்பமடைந்து நீங்குவது போல;முடிவுஇல்- முடிவில்லாத;கங்குல் இற்றது- இரவு கழிந்தது;கமலம் - தாமரை மலர்கள்;முகம் எடுத்தன- மலர்ந்தன. கதிரவன் தோன்றிய அளவில் இருள் நீங்குதலுக்கு மெய்யுணர்வு வந்து சேர்ந்த நிலையில் வினைகள் அழிந்தொழிதல் உவமம்; உவமை அணி. இரவுக் காலத்தில் மிக்கிருந்த துன்பம் பகற்காலத்தில் குறைவுபடுவதாலும், இராமன் அன்றையநாள் சுக்கிரீவன் நட்பைப் பெற இருப்பதாலும் 'விமலன் வெந்துயரின் எழ' என்றார். புகையும் சேறும் கலந்தாற்போன்ற வினை என்றது - பாவத்தைக் கருநிறமுடையதாகக் காட்டும் மரபை நோக்கும். புகை மேலிருப்பது, சேறு அடியிலிருப்பது. எனவே மேலும் கீழும் குற்றம் பொருந்திய தீவினைக்கு உவமையாயிற்று. பிரிந்திருப்பார்க்கு இரவு நீட்டித்ததாகத் தோன்றுமாதலின் 'முடிவில் கங்குல்' எனப்பட்டது. இராமனின் துயர் இனி நீங்குமாதலின் தாமரை தலை நிமிர்ந்து மலர்ந்தது எனலாம். விமலன் வெந்துயராவது - பிராட்டியைப் பிரிந்தமையால் உண்டான துன்பமாகும். 41 3750. | காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய, ஆலை ஏய் துழனி அகநாடர், ஆர்கலி அமுது போலவே உரைசெய் புன மானை நாடுதல் புரிஞர். |
ஆலை ஏய் துழனி -கரும்பாலைகளால் நிறைந்த ஓசையை யுடைய; அகல் நாடர் -பரந்த கோசலநாட்டிற்குரிய இராமலக்குவர்;ஆர்கலி அமுதுபோலவே - ஒலிக்கும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போல; உரைசெய் - இனிமையாகப் பேசுகின்ற;புன மானை -காட்டில் உள்ள பெண்மானை ஒத்த சீதையை;நாடுதல் புரிஞர் -தேடுபவர்களாய்; கடல் கவினு சோலை ஏய்- கடல்போன்ற சோலைகள் பொருந்தியதும்;மலை தழுவும் -மலைகள் தழுவப் பெற்றதுமான; |