ராசி -மேகக் கூட்டங்கள்;பொன் நெடுங் குன்றின் மேல் -பொன் மயமான பெரிய மலையில் மேல்;தாரைகள் பொழிந்த -மழைத் தாரைகளைச் சொரிந்தன. ஏந்தல் - பெருமையில் சிறந்தவன் இராமன். பிரிந்து நிற்கும் நிலையில் மன்மதன் மலர்க்கணை எய்தல் இயல்பாதலின் 'பிாந்த ஏந்தல் மேல்' என்றார். சீதையின் புன்னகை, இராமன் துயரம் மிக, ஏதுவாயது கருதி, 'இன்னகைச் சனகி' என்றார். தாமரைப்பூ, மாம்பூ, அசோகப்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ என்னும் ஐந்தும் மன்மதனின் மலரம்புகளாம். அம்புமாரி எனக் கூறுதல் மரபு ஆதலின் மழைத்தாரைக்கு மன்மதனின் மலர்க்கணை வழங்கல் உவமையாயது. பொறுமை, சலியாமை, பெருமை, வண்மை முதலிய குணங்களை உடைய இராமன். அவ்வியல்புகளை உடைய மலைக்கு உவமையாகத் தக்கவன். பொன்னெடுங் குன்று என்றது, அப்பொழுது இராமன் தங்கியிருந்த பிரசிரவணம் என்னும்மலையை. 15 4163. | கல்லிடைப் படும் துளித் திவலை, கார் இடு வில்லிடைச் சரம் என, விசையின் வீழ்ந்தன; செல்லிடைப்பிறந்த செங் கனல்கள் சிந்தின, அல்லிடை, மணி சிறந்து, அழல் இயற்றல்போல். |
கல்லிடைப் படும் -(அந்த மலையிலுள்ள) கற்களின் இடையே (மேகங்கள்) சொரிகின்ற;துளித்திவலை -மழை நீர்த்துளிகள்;கார் இடு வில்லிடை -மேகங்களில் தோன்றிய இந்திர வில்லிலிருந்து பாய்கின்ற;சரம் என -அம்புகள் போல;விசையின் வீழ்ந்தன -வேகத்தோடு விழுந்தன; செல்லிடைப் பிறந்த -(அம்) மேகங்களிலிருந்து தோன்றிய;செங்கனல்கள்- செந்நிறம் கொண்ட இடியாகிய நெருப்புத் திரள்கள்;மணி அல்லிடைச் சிறந்து -மாணிக்கங்கள் இரவுக் காலத்தில் மிகுதியாக ஒளிவீசி;அழல் இயற்றல் போல் சிந்தின -நெருப்பொளி வீசுதல் போலச் சிந்தின. வில் - இந்திரவில். செல்வது என்ற இயல்பு பற்றி மேகம் 'செல்' எனப்பட்டது போலும். மழைத் தாரைகள் அம்புபோல வீழ, இரவில் மாணிக்க மணிகள் போல ஒளி வீசி இடிகள் சிந்தின என்பதால் நீர், நெருப்பு என இரண்டினையும் மேகம் பெற்றிருந்தமை புலனாகிறது. 16 4164. | மள்ளர்கள் மறு படை, மான யானைமேல் வெள்ளி வேல் எறிவன போன்ற, மேகங்கள்; தள்ள அரும் துளி பட, தகர்ந்து சாய் கிரி, புள்ளி வெங்கட கரி புரள்வ போன்றவே. |
|