பக்கம் எண் :

அனுமப் படலம்37

 'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர்,
     கைச் சிலையர்' என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய
     நின்று, கற்பினின் நினைவும்:

     அஞ்சனைக்கு ஒரு சிறுவன்-அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான
அனுமன்;ஒரு மாணவப் படிவமொடு -ஒரு மாணாக்கன் வடிவம் தாங்கி;
அஞ்சனக்கிரி அனைய -
நீலமலையைப் போன்ற;மஞ்சனைக்குறுகி -
மைந்தனாம் இராமனை நெருங்கி;அயல் மறைய நின்று- அருகில் மறைவாக
நின்று;'வெஞ்சமத் தொழிலர்- (அவர்களை நோக்கி) இவர்கள் கொடிய
போர்த்தொழில் உடையர்;தவ மெய்யர் -தவவேடம் தாங்கிய உடம்பினர்;
கைச்சிலையர் -
கையில் வில்லேந்தியுள்ளனர்';என நெஞ்சு அயிர்த்து -
என்று மனத்தில் ஐயங்கொண்டு;கற்பினின் நினையும் -தனது
கல்விஅறிவால் அவர்களைப் பற்றிச் சிந்தித்தான்;

     அனுமன் உண்மை அறிதற் பொருட்டுத் தன் வடிவத்தை
மாற்றிக்கொண்டு மாணாக்க வேடத்தோடு இராமனை அணுகினான். அஞ்சனை
- அனுமனின் தாய்; அஞ்சனை மகன் ஆஞ்சனேயன்.  மஞ்சன் - மைந்தன்
என்பதன் போலி. தயரதன் மகன் என்னும் கருத்தால் மஞ்சன் என்றார்.
மைந்தன் - வலிமையுடையவன் என்றும் கொள்ளலாம்.  போர்த்தொழில்
உடையராயும், வில்லேந்தியவராயும் விளங்கியவர்கள் தவவேடம்
கொண்டவராயும் தோன்றியதால் அனுமன் ஐயங்கொண்டான்.  இவ்வாறே
சடாயுவும் இராமலக்குவரைக் கண்டபோது ''வினையறு நோன்பினர் அல்லர்;
வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ'' (2700) எனஅயிர்த்தான்.    4

3755.'தேவருக்கு ஒரு தலைவர் ஆம்
     முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்;
     மூரி வில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகில்? யாது,
     இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது
     எக் கிழமை கொடு?

     தேவருக்கு -தேவர்களுக்கெல்லாம்; ஒரு தலைவர் ஆம் -ஒப்பற்ற
தலைவர்களாகிய;முதல் தேவர் எனின் - முதன்மையான தேவர்களோ
என்றால்;மூவர் -அவர்கள் மூவராவர்;இவர் இருவர் -இவர்கள்
இருவராய் இருக்கின்றனர்;மூரிவில்கரர் -(அவர்கள் சூலம், திகிரி, வேதம்
ஏந்தியிருக்க) இவர்கள் வில்லைத் தாங்கிய சுரத்தினர்;இவரை ஒப்பவர் -
இவர்களை ஒத்தவர்கள்;உலகில் யாவர் -உலகில் யாருளர்?;இவர்க்கு
அரிய பொருள் -
இவர்களுக்குச் செய்தற்கு அரிய செயல்தான்;யாது -
யாது உளது?;கேவலத்து -