'புதிய மழைத் தாரைகள் அழிக்கப்பட்ட தாதுக்களையுடைய தாமரை மலர்களை விட்டு, வண்டுகள், தாதுக்களோடு கூடிய புதிய கடம்ப மலர்களை மகிழ்ச்சியோடு சேர்கின்றன' என்று வால்மீகி ராமாயணத்தில் கூறியிருப்பது ஈண்டுக் காணத்தக்கது. சிறந்த தாமரை மலரில் துயின்று பழகிய வண்டு, மரங்களிடையேயும் உயர்ந்த சந்தன மரத்தையே நாடிச் சென்ற நயம் காண்க. உயர்திணை மக்கள் வெம்மையை விரும்பியது போல அஃறிணை உயிரான வண்டுகளும் வெம்மையைத் தேடிச் சென்றன என்பதால் குளிரின் மிகுதி கூறப்பட்டது. இப்பாடலில் மருத நிலத்துத் தாமரையில் துயிலும் வண்டு குறிஞ்சி நிலச் சந்தன மரத்திற்குச் சென்றது எனத் திணைமயக்கம் கூறப்பட்டது. 80 | 4228. | தாமரை மலர்த் தவிசு இகந்து, தகை அன்னம், மாமரம் நிரைத் தொகு பொதும்பருழை வைக; தே மரம் அடுக்கு இதணிடைச் செறி குரம்பை, தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார். |
தகை அன்னம் -அழகிய அன்னப்பறவைகள்;தாமரை மலர்த் தவிசு இகந்து -தாமரை மலராகிய தங்கள் இருப்பிடத்தை விட்டு நீங்கி;மா மரம் நிரைதொகு -பெரிய மரங்கள் வரிசையாகத் திரண்ட;பொதும்பர் உழை வைக -சோலையில் சென்று தங்க;தேமரம் அடுக்கு -நறுமணம் மிக்க மரக்கட்டைகளை அடுக்கியமைத்த;இதணிடை செறி குரம்பை -பரணில் பொருந்திய குடிசையில்;தூ மருவு எயிற்றியரொடு -வெண்ணிறம் பொருந்திய பற்களையுடைய வேட்டுவப் பெண்களுடனே;அன்பர் துயில்வுற்றார் -அவர்களின் அன்புமிக்க கணவர்கள் உறங்கினார்கள். குளிரால் வருந்திய அன்னம் நீரிலுள்ள தாமரை மலரை விட்டுக் குளிர் இல்லாத உயர்ந்த கிளைகளை உடைய மரங்கள் செறிந்த சோலையில் சென்று தங்கியது; பறவைகள் வாராத மழைக்காலத்தில் தினைப்புனம் காக்கும் வேலையின்மையால் வேட்டுவ மகளிரும் வேடர்களும் குளிர்நீங்கப் பரண் குடிசைகளில் உறங்கினர். தவிசு - ஆசனம், தேமரம் - சந்தனம் முதலிய மரங்கள். வைகத் துயில்வுற்றார் எனக் காரண காரியத்தொடர்பின்றிச் செயவெனெச்சம் வினை கொண்டுமுடிந்தது. 81 | 4229. | வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்தோறு, எள்ள அரு மறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்; கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி, |
|