பக்கம் எண் :

392கிட்கிந்தா காண்டம்

பாய்ந்தது போன்றிருக்கவும்;வீகிலேன் -நான் இறவாமல்இருக்கின்றேனே!

     பகைவர் மார்பில் பட்டு ஊன் தோய்ந்திருத்தல் பற்றித் 'தூநிறச் சரம்'
என்றும், பகைவர்ககளச் சுடவல்லது ஆதலின் 'சுடுசரம்' எனவும் சிறப்பித்தார்.
'நின்கைச் சுடு சரம் அனைய சொல்லால்' (472) என்றதும் காண்க.  தூங்குதல்
- தொங்குதல், செயலற்றுக் கிடத்தல் என இரு பொருள்பட அமைந்துள்ளது.
பகைவரை வெல்லவல்ல படைவலிமையும் தோள்வலிமையும் பெற்றிருந்தும்
தீங்கு செய்தவனைத் தண்டிக்காது துன்பத்தை அனுபவிக்கும் நிலை தனக்கு
வருதல் வேண்டுமா என இராமன் கலங்கினான்.  இந்நிலை தனக்கு வரலாகாது
என்பானாய் இதுவும் உறக்கடவதே' என்றான்.  தன் தோளின் உயர்வும்
வலிமையும் தோன்ற 'வானுறப் பிறங்கிய வயிரத் தோள்' என்றான்.  மார்பில்
வேல் பட்டாற்போல் இவ்வளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்தலும்
வேண்டுமோ, இறத்தலே ஏற்றதன்றோ என இராமன் வருந்தும் நிலையைக்
காண்கிறோம்.  ஒத்துழி - ஒத்த உழி என்பதன் தொகுத்தல் - ஒத்துழியும் -
உம்மை இழிவு சிறப்பும்மை.                                       86

4234.'தெரி கணை மலரொடும்
      திறந்த நெஞ்சோடும்,
அரிய வன் துயரொடும்,
      யானும் வைகுவேன்;
எரியும் மின்மினி மணி
     விளக்கின், இன் துணைக்
குரிஇனம், பெடையோடும்
      துயில்வ, கூட்டினுள்.

     குரிஇனம் -குருவிக்கூட்டங்கள்;எரியும் மின்மினி -ஒளிவிடுகின்ற
மின்மினிப்பூச்சிகளாகிய;மணி விளக்கின் -அழகிய விளக்கின் ஒளியில்;
இன்துணைப் பெடையோடும் -
தன் இனிய துணையாகிய பெண்
குருவிகளோடு;கூட்டினுள் துயில்வ -கூட்டினுள் (இன்பமாய்)
உறங்குகின்றன;யானும் -நானும்;தெரிகணை மலரொடும் -மன்மதன்
ஆராய்ந்து எய்த மலர்களாகிய அம்புகளால்;திறந்த நெஞ்சொடும் -
பிளவுற்ற நெஞ்சத்தோடும்;அரிய வன் துயரொடும் -பொறுத்தற்கரிய
கொடிய துன்பத்தோடும்;வைகுவேன் - (சீதையைப் பிரிந்து) காட்டில்
தங்கியிருக்கிறேன்.

     பறவையினத்தைச் சார்ந்த குருவிக்கு அமைந்த இன்ப வாழ்க்கைகூட,
உயர்ந்த மானிடப்பிறவில் தோன்றிய தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே
என இராமன் வருந்திக் கூறியது இப்பாடல். 'கூட்டினுள்' என்று
கூறியதற்கேற்பக் 'காட்டில்' என்பதும், 'மின்மினி மணி விளக்கின்'
என்பதற்கேற்ப 'இருளில்' என்பதும் கொள்ளவேண்டும்.  குருவிகள் மின்மினிப்
பூச்சிகளின் ஒளியில் தம் கூடுகளில் பெடையொடு துயிலத் தான் இருளில்,
வனத்தில துணையின்றித் துயிலாது உள்ளேனே எனப் பொருள் விரித்துக்
கொள்ளல் வேண்டும்.

     மின்மினியைக் குருவிகள் (வெளிச்சத்திற்காகத்) தம் கூட்டில் வைத்தல்
உண்டு என்பதைத் 'தகைசால் மணி மேட்டு இமைப்பன; 'மின்மினி ஆம்'
எனக்